இமாச்சல பிரதேசத்தில் 39 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்ட சிவன் கோவில்..
வியாழன், 15 டிசம்பர் 2022 (20:45 IST)
இமாச்சல பிரதேசத்தில் 39 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்ட சிவன் கோவில்..
இமாச்சல பிரதேச மாநிலத்தில் 39 ஆண்டுகளில் கட்டிமுடிக்கப்பட்ட சிவன் கோயில் ஒன்று தற்போது பக்தர்களால் பூஜிக்கப்பட்டு வருகிறது.
இமாச்சல பிரதேச மாநிலத்தில் ஜடோலி சிவன் கோயில் என்று ஒன்று உள்ளது. இந்த ஆலயத்தை கட்டி முடிக்க சுமார் 39 ஆண்டுகள் ஆனதாகவும் 100 படிக்கட்டுகளுடன் கூடிய இந்த கோவிலில் பக்தர்கள் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது என்றும் கூறப்படுகிறது.
இயற்கை எழில் கொஞ்சும் இமாசலப் பிரதேசத்தில் இந்த கோவில் இடம் பெற்றுள்ளதை அடுத்து இந்த கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் தினமும் வழிபாடு செய்ய வருகை தந்து வருகின்றனர்
ஆசிய கண்டத்தில் சிவபெருமானின் மிக உயரமான கோயில் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை வாயிலில் 100 படிக்கட்டுகள் உள்ளன என்றும் இதில் ஏறி சென்று சிவபெருமானை வழிபட்டால் பெரும் பலன் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது