தீபாவளிக்கு முந்தைய தினத்தன்று யம தீபம் ஏற்றப்படிகிறது. யம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். தொழில் முன்னேறும். திருமணத் தடைகள் விலகும், சொத்துகள் சேரும். அனைத்துவிதத் தடைகளும் நீங்கி, வாய்ப்புகள் தானாகவே வரும்.
மாஹாளய பட்சத்தில் பூலோகத்துக்கு வரும் முன்னோர்களுக்கு, மாஹாளய அமாவாசை அன்று திதி கொடுக்கப்படுகிறது. அப்படி வந்த அவர்கள் மீண்டும் திரும்பிச் செல்வதற்கு வெளிச்சம் காட்டுவது “யம தீபம்” மட்டுமே. அத்தீபத்தை தீபாவளி காலத்தில் வருகிற திரயோதஸி திதியில் ஏற்ற வேண்டும். இது எப்போதும் தீபாவளிக்கு முதல் நாள் அன்று வரும்.
வீட்டின் வெளிப்புறம் உயரமான பகுதியில் யம தீபம் ஏற்றப்பட வேண்டும். அப்படி விளக்கேற்ற வீட்டில் வசதி இல்லா விட்டால் வீட்டிற்குள்ளும் யம தீபம் ஏற்றலாம். யம தீபம் தெற்கு திசை நோக்கி எரிய வேண்டும். யம தீபம் ஏற்றி முன்னோர்களுக்கு வழிகாட்டி உதவுவது, அந்த வருடம் முழுவதும் நல்ல பலன்களைத் தரும்.