இக்கோவிலில் எட்டு திசைகளிலும் எட்டு லட்சுமிகளின் வடிவங்கள் அமைந்துள்ளன. ஒவ்வொரு லட்சுமியும் தனித்தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். ஒவ்வொரு லட்சுமி வடிவமும் வெவ்வேறு அம்சங்களையும், நன்மைகளையும் வழங்குகிறது.
65 அடி நீளம், 45 அடி அகலம் கொண்ட இக்கோவில், கலையம்சத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. கோபுரம் ஐந்து நிலைகளைக் கொண்டது. ஒவ்வொரு நிலையிலும் லட்சுமியின் வடிவங்கள் அமைந்துள்ளன.
கோவிலில் தசாவதார மூர்த்திகள், குருவாயூரப்பன், கணபதி, தன்வந்திரி மற்றும் அனுமன் சன்னதிகளும் உள்ளன. நவகிரகங்கள் தனித்தனி சன்னதியில் அமைந்துள்ளன. கோவிலில் தினமும் மூன்று வேளை பூஜைகள் நடத்தப்படுகின்றன. வார இறுதி நாட்களில் மற்றும் விழாக்களில் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.