ரோஸ் வாட்டர்: ரோஸ் வாட்டர்- ஒரு தேக்கரண்டி, தேன்- ஒரு தேக்கரண்டி, கஸ்தூரி மஞ்சள் தூள்- ஒரு தேக்கரண்டி மூன்றையும் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். இந்த பேஸ்ட் ஒரு சிறந்த ஆன்டி- ஏஜிங்காக செயல்படுகிறது.
முட்டை: முட்டையின் வெள்ளைக்கருவுடன் ஒரு முழு தேக்கரண்டி பாதாம் ஆயிலை நன்கு கலக்க வேண்டும். இந்த கலவையை முகச்சுருக்கம் உள்ள இடத்தில் தடவி 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ, முகத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமத்திற்கு தேவையான புரோட்டீன்கள் கிடைக்கும்.
தோலுடன் முழு பச்சை பயறு 2 டேபிள் ஸ்பூன். எலுமிச்சை இலை 1 (நடு நரம்பை அகற்றிவிடவும்), வேப்பிலை 1. துளசி 4. பூலான் கிழங்கு 1. ரோஜா மொட்டு 2. கசகசா அரை சிட்டிகை. இவற்றை முந்தைய நாள் இரவே தயிரில் ஊறவைத்து. மறுநாள் அரைத்து பேஸ்டாக்கிக் கொள்ளுங்கள்.