1 டீஸ்பூன் பாதாம் பொடியில், முட்டையின் வெள்ளைக் கருவை சேர்த்து பேஸ்ட் செய்து, அத்துடன் 1/2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊறவைத்து கழுவ வேண்டும். இதன் மூலம் சருமத்தின் நிறம் விரைவில் அதிகரிக்கும்.
கசகசாவை இரவில் ஊறவைத்து மறு நாள் அதனை பால் சேர்த்து அரைத்து முகத்தில் தடவுங்கள். நன்றாக காய்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவுங்கள். தினமும் அல்லது வாரம் மூன்று நாட்கள் செய்தால், கழுத்து வாய்ப்பகுதிகளில் இருக்கும் கருமை மறைந்து நிறம் பெறும்.