காபி தூள், முல்தானி மெட்டி, கற்றாழை ஜெல் உள்ளிட்டவற்றை கலந்து கொள்ள வேண்டும். இதனை ஒருநாள் விட்டு முகத்தில் ஸ்கரப் செய்து கழுவி வர சருமத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் பசையை நீங்கி புத்துணர்ச்சியாக இருக்கும்.
4 ஸ்பூன் காஃபி தூளில் ஒரு கப் பால் மற்றும் 2 ஸ்பூன் தேன் கலந்து முகம் கை, கால்கள், கழுத்து போன்ற இடங்களில் தடவி 10-15 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள்.
காஃபி தூள் ஒரு கப், ஏலக்காய் பொடி 2 ஸ்பூன், தேங்காய் எண்ணெய் 3 ஸ்பூன் மற்றும் சர்க்கரை 1 கப் சேர்த்து நன்கு கலந்துகொள்ளுங்கள். அதை குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன் முகம் மட்டுமல்லாது கை கால்களிலும் தேய்த்து சிறிது நேரம் ஊறவைக்கவும். பின்னர் மிதமான நீரில் குளிக்கவும்.