முகம் மற்றும் கூந்தலை பராமரிக்க ஏற்ற அரிசி கழுவிய நீர் !!

அரிசி கழுவிய நீரில் உள்ள சத்துக்கள் சருமத் துளைகளின் வழியே சரும செல்களுக்கு கிடைத்து, சருமம் ஆரோக்கியமாகவும் பொலிவோடும் இருக்கும். அதற்கு தினமும் ஒவ்வொரு முறை முகத்தைக் கழுவும் போதும், அரிசி கழுவிய நீரினால் கழுவ வேண்டும்.

அரிசி கழுவிய நீரானது கூந்தலின் எலாஸ்டிசிட்டியை அதிகரித்து, அதனால் முடி பாதிக்கப்படுவது தடுக்கப்படுவதாக ஆய்வுகளின் மூலம் தெரிய வந்துள்ளது. 
 
அரிசியில் உள்ள ஸ்டார்ச் எனும் மூலக்கூறு தண்ணீரில் ஊறவைக்கும்போது 80% உறிஞ்சப்படுகிறது. அந்த நீரில் விட்டமின் B, E ஆண்டி ஆக்ஸிடண்ட், பல  மினரல் சத்துகள் ஆகியவை அடங்கியுள்ளன.
 
அரிசி கழுவிய தண்ணீரை இனிக் கீழே ஊற்றாமல் பத்திரப்படுத்தி உங்கள் தலைமுடிக்கு மசாஜ் செய்து தலைக்குக் குளியுங்கள். இல்லையெனில் தலைக்குக் குளித்தபின் இறுதி நீராக இந்த அரிசி தண்ணீரை ஊற்றி அலசுங்கள்.
 
நீங்கள் வழக்கமாக செய்வது போல் முடியை ஷாம்பு மற்றும் கன்டிசனர்களைப் பயன்படுத்திக் கழுவிய பின்னர் இறுதியாக அரிசி ஊறவைத்த நீரை பயன்படுத்தி  முடியை கழுவ வேண்டும். 
 
கூந்தல் அதிக வறட்சியுடன் மென்மையின்றி இருந்தால், அப்போது அரிசி கழுவிய நீரைக் கொண்டு கூந்தலை அலசி, சிறிது நேரம் ஊறவைத்து, பின் சுத்தமான குளிர்ந்த நீரில் கூந்தலை அலச வேண்டும்.
 
அரிசி தண்ணீர் பெற அரிசியை நன்றாக 2 முறை கழுவிக்கொள்ள வேண்டும், பின்னர் அரிசியை சுத்தமான நீரில் 1/2 மணி நேரம் ஊறவைத்து, அந்த நீரை வடிகட்டவேண்டும். பின்னர் அந்நீரால் முகத்தையும், கூந்தலையும் பராமரிக்கலாம். இவ்வாறு செய்தால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் அனைத்தும் நீங்குவதோடு, சருமத்துளைகளும் அடைக்கப்படும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்