முகத்தில் காணப்படும் அதிகபட்ச எண்ணெய்யை போக்கி மிருதுவாக்கும் அரிசிமாவு !!

Webdunia
செவ்வாய், 21 டிசம்பர் 2021 (10:56 IST)
அரிசியில் உள்ள டைரோசினேஸ் தோலில் மெலாமின் உருவாகுவதை கட்டுப்படுத்துகிறது. இதுவே தோல் பகுதியில் உள்ள அதிகபட்ச எண்ணெய் மற்றும் சீபம் போன்றவற்றை நீக்குகிறது. 

அரிசியில் உள்ள உயர்வான விட்டமின் டி சத்து வாயிலாக புதிய செல் உருவாக்கம் நடைபெற்றது. அதனால் வயோதிக தோற்றம் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.
 
அரிசிமாவுடன் மஞ்சள் தூள், காய்ச்சாத பசும் பால் சேர்த்து பேஸ்ட் போல் குழைக்கவும். இதை ஸ்ட்ரெச் மார்க் இருக்கும் இடங்களில் தடவி விடவும். 30 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
 
அரிசி மாவு 3 டீஸ்பூன், பன்னீர் 3 டீஸ்பூன் மற்றும் தயிர் 3 டீஸ்பூன் சேர்த்து நன்றாக குழைத்து முகத்தில் பேக் போடவும். பிறகு நன்கு மசாஜ் செய்து விடவும். அப்படியே உலரவிடவும். 30 நிமிடங்கள் கழித்து முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
 
அரிசி மாவை சிறிது நீரில் கரைத்து ஐஸ்க்யூப்களில் ஊற்றி வைக்கவும். அவை ஐஸ்கட்டிகளாக உறைந்ததும் அதை கொண்டு சருமத்தில் முகம் முழுக்க எங்கெல்லாம் அரிப்பு பிரச்சனை உள்ளதோ அங்கெல்லாம் ஒத்தடம் கொடுக்கவும்.
 
அரிசி மாவுடன் சர்க்கரை சேர்த்து கலந்து முகத்தில் இலேசாக மசாஜ் செய்யவும். முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மூக்கு நுனிகள் கழுத்தில் இருக்கும் கருமைகள் போன்ற இடங்களில் நன்கு ஸ்கரப் செய்து பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி, பிறகு ஐஸ்கட்டிகள் கொண்டு முகத்துக்கு ஒத்தடம் கொடுக்கவேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்