முகத்தில் வழியும் எண்ணெய் பசையை போக்கி பளபளப்பாக்கும் குறிப்புகள்.....!!

எண்ணெய் வழியும் முகத்தால் சில நேரங்களில் முகத்தின் அழகே கெட்டு விடுகிறது. இதனை வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி எவ்வாறு சரிசெய்வது என்பதை பார்ப்போம்.

முகத்தில் அதிகம் எண்ணெய் வடிந்தால் முதலில் முகத்தை அடிக்கடி கழுவ வேண்டும். இதனால் முகத்தில் எண்ணெய் பசை குறைந்து முகம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். மேலும், முகத்தில் சோப்பு போட்டு கழுவுவதற்கு பதில் கடலை மாவு போட்டு கழுவினால் முகம் எண்ணெய் பசை விலகி பளபளப்பாக இருக்கும்.
 
முட்டையின் வெள்ளைக் கருவை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவ வேண்டும். இம்முறையை தினமும் செய்து வந்தால், நல்ல மாற்றத்தை 
 
தக்காளியை நன்றாக சாறு பிழிந்து அதை முகத்தில் தடவி சிறிது நேரம் ஊறவைத்து முகத்தை கழுவினால் எண்ணெய் பசை நீங்கி முகம் பளிச்சென மாறும்.  முகத்தில் மோரை பூசி சிறிது நேரத்திற்குப்பின் கழுவி வந்தால் எண்ணெய் தன்மை குறையும்.
 
தக்காளி சாற்றில் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இம்முறையை தினமும் செய்து வந்தால், நல்ல மாற்றத்தை நீங்களே காண்பீர்கள். 
 
காலை எழுந்ததும் வெள்ளரி காயை சிறிது சிறிதாக வெட்டி முகத்தில் தேய்த்து வர எண்ணெய் பசை விலகி முகம் பொலிவு பெரும். இந்த எளிய தீர்வுகளை  செய்வதன் மூலம் முகத்தில் இருக்கும் எண்ணெய் பசையை சரித்து செய்து பொலிவான முகத்தை பெறமுடியும்.
 
புதினா இலைகளை அரைத்து சாறு எடுத்து, அந்த சாற்றினை சருமத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து கழுவி வர, சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் பசை சுரப்பது தடுக்கப்படும். இம்முறையை தினமும் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
 
கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இப்படி எண்ணெய் பசை சருமத்தினர் தினமும் செய்து வந்தால், சருமத்தில் எண்ணெய் பசை கட்டுப்படுத்தப்படுவதோடு, சருமத்தின் நிறமும் அதிகரித்துக் காணப்படும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்