நெயில்பாலிஷ் கவனத்திற்கு

வியாழன், 22 ஜனவரி 2015 (11:12 IST)
பெண்கள் முதல் குழ‌ந்தைக‌ள் வரை நெயில்பாலிஷ் எனப்படும் நகப்பூச்சைப் பயன்படுத்துகிறோம்.
ஆனால் அந்த நகப்பூச்சுகளில் எத்தனை விதங்கள், நிறங்கள் உள்ளன என்பதை நம்மில் சிலர் அறிந்திருக்க மாட்டார்கள். முதன் முதலில் நகப்பூச்சைக் கண்டுபிடித்தவர்கள் யார் தெரியுமா? அவர்கள் சீனர்கள் தான். அவர்கள் எளிய முறையில் கையில் கிடைத்தப் பொருட்களைக் கொண்டு நகப்பூச்சை செய்து பயன்படுத்தி வந்தனர்.
 
பின்னர் படிப்படியாக சில ரசாயனங்களையும், நிறங்களையும் கொண்டு நகப்பூச்சு தயாரிக்கப்பட்டு வருகிறது. முன்பெல்லாம் சிகப்பு மற்றும் வெளிர் சிகப்பு நிறத்தில் மட்டுமே நகப்பூச்சுக்கள் வந்தன. ஆனால் தற்போதெல்லாம் ஆடைக்கேற்ற அனைத்து நிறங்களிலும் நகப்பூச்சுக்கள் அலங்கரிக்கத் துவங்கிவிட்டன.
 
நெயில்பாலிஷ் வாங்கும்போது அதனை கைகளில் போட்டுப் பார்த்து வாங்குவது சிறந்தது. அது தமது நிறத்திற்கு சரியாக உள்ளதாக என்பதை பார்த்துக் கொள்ளலாம்.நெயில்பாலிஷ் ரிமூவர் என்பது, ஒரு நெயில்பாலிஷ் போட்டு அதனை மாற்ற வேண்டும் என்றால் ரிமூவரைக் கொண்டு நெயில்பாலிஷை அழித்துவிடலாம். 
 
நெ‌யி‌ல்பா‌லி‌ஷ‌் ‌ரிமூவரை வாங்கி பயன்படுத்தும் போது மிகவும் எச்சரிக்கையாக எடுத்து வைக்க வேண்டும். இல்லை எனில் அது ஆவியாகிவிடும். மேலும், கை விரல்களில் எப்போதும் நெயில்பாலிஷ் போட்டுக் கொண்டே இருக்க வேண்டாம். ஏனெனில் நகங்கள் பல வியாதிகளை முன்னறிவிப்பவை. 
 
மேலும், நகங்கள் சூரிய வெளிச்சம் பட்டால் அது உடலுக்கும் நல்லது. எனவே விரல்களுக்கு வாரத்தில் ஒரு சில நாட்களுக்காவது நகப்பூச்சுக்களில் இருந்து விடுமுறை அளியுங்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்