தலைமுடியைப் பாதுகாக்க...

வெள்ளி, 3 ஏப்ரல் 2015 (11:11 IST)
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது பழமொழி. முகத்திற்கு அழகு சேர்ப்பதில் தலைமுடி பிரதானமாக அமைகிறது.
 
பெரும்பாலானவர்கள் சிறு வயதில் தலைமுடியை சரிவரப் பராமரிப்பதில்லை. விளைவு? 35 - 40 வயதிலேயே முடி உதிர்ந்து வழுக்கை அல்லது முன் வழுக்கை ஏற்பட்டு விடும்.
 
தலைமுடி உதிர்வைத் தடுக்கவும், அவற்றை முறையாகப் பராமரித்து ஆரோக்கியமாகத் திகழவும் இதோ சில தகவல்கள்:
 
தலைமுடியின் வகை எதுவாயிருந்தாலும் லேசான ஷாம்பு பயன்படுத்தி அதன் வனப்பையும் ஆரோக்கியத்தையும் காப்பது அவசியம். மிகவும் அழுக்கடைந்த முடிக்கு, கிளாரிஃபயர் பயன்படுத்தலாம். ஷாம்பு போட்டு வெதுவெதுப்பான தண்ணீரில் அலசினால் நல்லது.
 
முடிக்கு இயற்கை எண்ணெய் தடவுவது அவசியம். எண்ணெய் தலையில் சிறிதளவேனும் இருப்பது நல்லது. கன்டிஷனர் நிறைந்த சன்ஸ்கிரின் பயன்படுத்தினால் முடியின் பளபளப்பு நீடிக்கும். டிரையர்களை சற்று தள்ளி வைத்துப் பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் முடி அதிகம் உலர்ந்து வறட்சியாகக் காணப்படும்.
 
தலைமுடிக்கு வண்ணம் பூசுவதும் நல்லது. நீச்சலின்போது முடி நன்கு அலசப்படுகிறது. உப்பு நீராக இருப்பின் முடியின் அடிப்பகுதிக்கு பாதிப்பு ஏற்படும். நல்ல தண்ணீர் கொண்டு மீண்டும் தலையை அலச வேண்டும்.
 
கோடை காலத்தில் முடியைப் பாதுகாக்க தொப்பி அணிவது முக்கியம்.

வெப்துனியாவைப் படிக்கவும்