முக அழகை இரட்டிப்பாக்கவும் முகத்தின் கருமை, முகப்பருக்கள், முக வறட்சி போன்ற பல பிரச்சினைகளை திராட்சை சரி செய்கிறது.
1. யோகர்ட் 1 ஸ்பூன், 4 திராட்சை, எலுமிச்சை சாறு 1/2 ஸ்பூன். செய்முறை : முதலில் திராட்சையுடன் யோகர்ட் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும். அதன் பின் இதனுடன் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து முகத்தில் தடவவும். 20 நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரில் முகத்தை கழுவவும். இந்த குறிப்பை தொடர்ந்து செய்து வருவதால் முகத்தில் உள்ள பருக்கள் நீங்கி, பொலிவான முகத்தை பெறலாம்.
2. தேவையானவை : முல்தானி மட்டி 1 ஸ்பூன் பன்னீர் 1 ஸ்பூன் திராட்சை 4 எலுமிச்சை சாறு 1 ஸ்பூன். செய்முறை : முதலில் திராட்சையை அரைத்து கொண்டு அதனுடன் எலுமிச்சை சாறு, பன்னீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பிறகு இந்த கலவையை முல்தானி மட்டியுடன் சேர்த்து முகத்தில் தடவி, 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவவும். இந்த குறிப்பு உங்கள் முகத்தை பளபளவென மாற்றும்.
3. தக்காளி 1, திராட்சை 8. செய்முறை : தக்காளியை முதலில் நன்கு அரைத்து கொள்ளவும். அடுத்து, இதனுடன் சேர்த்து திராட்சையையும் அரைத்து முகத்தில் தடவி கொள்ள வேண்டும். 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவவும். இவ்வாறு தொடர்ந்து வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் நல்ல பலனை பெறலாம்.
4. பப்பாளி ஜுஸ் 1 ஸ்பூன் திராட்சை 4 தேன் 1 ஸ்பூன். செய்முறை : திராட்சை மற்றும் பாப்பாளியை நன்கு அரைத்து கொள்ளவும். அடுத்து இதனுடன் தேன் சேர்த்து முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும். இவ்வாறு செய்வதால் முக வறட்சி நீங்கி, என்றும் ஈரப்பதத்துடன் இருக்கும்.