இடையிடையே முட்டைக்கோஸ் சாற்றை விரல்களில் தொட்டுக் கொள்ளவும். இருபது நிமிடங்கள் கழித்து ஈரமான பஞ்சால் முகத்தைத் துடைத்து விடவும். பிறகு முட்டைக்கோஸ் விழுது, பால் ஒரு ஸ்பூன் மற்றும் தேன் 1 ஸ்பூன் சேர்த்து நன்றாக கலந்து முகத்திற்கு பேக் போடவும்.
தினமும் ஒரு கப் பழத்துண்டுகளை சாப்பிட பழகுங்கள். கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுகளை தவிர்ப்பதும் நல்லது. உணவில் புரதம், இரும்புசத்து, வைட்டமின் அதிகம் இருக்கும்படி பார்த்துகொள்ளுங்கள். எல்லாவற்றையும் விட மிக முக்கியமானது நீர். தினமும் உடலுக்கு தேவையான அளவு நீர் எடுத்துகொள்வதன் மூலம் சருமத்தில் இருக்கும் நச்சு வெளியேறுவதால் சருமம் எப்போதுமே பொலிவாக இருக்கும்.