மேக்கப் போடுவது ஒரு தனி கலை

வெள்ளி, 31 ஜூலை 2015 (11:52 IST)
எல்லோருக்கும் தெரிந்ததுதான் பவுன்டேஷன், ஐலைனர், பவுடர் ஆகியவை. ஆனால் அதன் திறமையான உபயோகம் ஒருவர் தோற்றத்தையே மாற்றக்கூடியது என்பது பலருக்கும் தெரியாத ஒன்று. உங்களை அழகாகவும் இளமையாகவும் தோன்ற வைக்கக் கூடியதும் மேக்கப்தான். 
 
கீழ்வரும் எளிய குறிப்புகள் சிறந்த முறையில் மேக்கப் போட உங்களுக்கு உதவும்.
 
பவுன்டேஷன்:
 
இதை லேசாக பயன்படுத்துவது நல்லது. அதிகப்படியான மேட் பவுன்டேஷன் முகத்தின் கோடுகளை வெளிப்படுத்திக்காட்டும். மேலும் முகத்தில் சுருக்கங்கள் இதன் அதிகப்படியான உபயோகத்தின் பின் விளைவு ஆகும். 
 
கண்களில் ஒளியை ஏற்படுத்துங்கள்:
 
நல்ல "ஐ ஷேடோவை" அடிப்படையாக பயன்படுத்துவதால் கண்களுக்கு அதிகப்படியான ஒளி கிடைக்கிறது. பளபளக்கும் வெளிர் நிறங்களை பயன்படுத்தி பாருங்கள். உங்கள் கண்களின் ஒளியையும் அதிகரிக்கும்.
 
"ஹைலைட்டர்" உபயோகியுங்கள்:
 
வெளிர் நிற அல்லது பளபளக்கும் ஐஷேடோ அல்லது கிரீம் ஹைலைட்டரை" கண்ணங்களின் மேற்பகுதியில், இமைகளுக்கு மேல் எலும்புப் பகுதியில் மற்றும் உதட்டின் மேற்பகுதியில் தடவினால் முகத்தின் பளபளப்பு அதிகமாகும். 

வெப்துனியாவைப் படிக்கவும்