உடலை ஒரு ஓவியமாக்க . . .

வியாழன், 1 மார்ச் 2012 (23:38 IST)
FILE
குறத்திகளும், ஹிப்பிகளும் மட்டுமே பச்சை குத்திக் கொள்வார்கள் என்பது போய் இப்பொழுது பச்சை குத்துவது உலகெங்கும் ஃபேஷனாக பரவி வருகிறது.

நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எகிப்தியர்கள் இக்கலையை உலகிற்கு வழங்கினர். இதற்கான உதாரணத்தை அவர்கள் “மம்மி” என்னும் புதையுடல்களில் செய்திருப்பதைக் காணலாம். அந்தக் கலையில் இன்று “டாட்டு”, பாடி ஆர்ட், ஸ்டாம்ஸ், ஹினா, பாடி பெயின்ட் என்று பல்வேறு விதங்கள் காணப்படுகின்றன.

நீங்கள் இன்று எந்த நிறத்திலும், உடலின் எந்த பாகத்திலும் எந்த வடிவத்தையும் பொறித்துக் கொள்ளலாம்.

இந்த ஊசியைக் கொண்டு நடைபாதையில் பச்சை குத்தி கொள்வது என்ற காலம் மாறி விட்டது என்று இக்கலாச்சாரம் பிரபல்யம் பெற்று வெகு வேகமாகப் பரவி வருவதால், இந்தியாவிலும் உலகத் தரம் மிக்க வடிவமைப்பாளர்கள் உருவாகியுள்ளதோடு இதற்கான மையங்களும் உருவாகிக் கொண்டுள்ளன.

பச்சை குத்தும் பொழுது குத்திக் கொள்பவருக்கு வலி உண்டாகும். ஆனால் சில பெண்களுக்கு இது எறும்பு கடிப்பதைப் போன்ற உணர்வையே ஏற்படுத்துகிறதாம்!

முதலில் 60 நொடிகளுக்கு அவஸ்தை ஏற்பட்டாலும் உங்களுக்குப் பிடித்த பெயர், படம் உருவானவுடன் உங்கள் உடலில் ஏற்படும் வலி பறந்தோடி விடும். இது காது அல்லது மூக்கு குத்துவதைக் காட்டிலும் போன்றவற்றைக் காட்டிலும் குறைவான அவஸ்தையையே கொடுக்கக் கூடியது.

நீங்கள் இந்த சின்ன வலியைக் கூட பொறுத்துக் கொள்ள முடியாவிட்டால் வேறு வழிகளும் உண்டு. இன்று இந்தக் கலை வேறு ரூபம் எடுத்து, பச்சை “குத்துவதற்குப் பதில்” பச்சைப் பதிக்கும் கலையாக மாறியுள்ளது.

FILE
மற்றொரு முறை பாடிபெயின்ட்ங். இதில் பச்சை நிறம் மட்டுமல்ல மற்ற நிறங்களையும் கொண்டு வரலாம். உங்களுக்கு வேண்டாம் என்று எண்ணும் பொழுது தண்ணீரால் கழுவி துடைத்து விடக்கூடிய அக்ரிலிக் நிறத்தைக் கொண்டு உடலில் பூசிக் கொள்ளலாம்.

இதைத் தவிர மருதாணியை கையில் பூசிக் கொள்வது நம் பாரம்பரிய மற்றும் பாதுகாப்பான முறையாகும். இப்பொழுது மருதாணி பூசுவதிலும் பாராம்பரிய முறைகளுடன் மெல்லிய வடிவங்கள் மற்றும் பூ வடிவங்களுடன் ஆஃபிரிக்கன் முறைகளும் புகுந்துள்ளன.

ஆஃப்ரிக்கன் மருதாணி முறையில் உடல் முழுக்க கருப்பு நிறத்தை பூசிக் கொள்ள முடியும் என்றாலும், அது உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியது. நீங்கள் ‘ஹினா’வைக் கொண்டு உடலை அழகுபடுத்த அடிதல் தேனீர், கிராம்பு, எலுமிச்சை மற்றும் சர்க்கரை கலக்கவும்.

கைகளைத் தவிர உடலில் பூசிக் கொள்ளும் பொழுது கவனம் தேவை. மாலைப் பொழுதை மயக்கும் பொழுதாக்க இதைத் தவிர வேறு வழியுள்ளதா?

உடலில் பச்சை குத்திக் கொள்வதற்கும், வர்ணம் பூசிக் கொள்வதற்கும் முன் சில விஷயங்களில் அவசியம் கவனம் தேவை.

-“ஸ்டெரிலைஸ்” செய்தால் எவ்வித கிருமிகளின் பாதிப்பும் இருக்காது.

-பச்சை குத்துபவர் கையுறைகள் அணிய வேண்டும்

-அதில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்

-பச்சை குத்துவதற்கு முன், குத்தப் போகின்ற வடிவத்தை அவசியம் ஒரு முறை காட்ட வேண்டும்.

-உங்கள் சொந்த ரசனையை பச்சை குத்துவதிலும் கடைபிடிக்கவும்.

உலகம் முழுக்க அறியப்பட்டுள்ள இக்கலைக்கு ஜப்பானியர்களிடையே வரவேற்பு இல்லை என்பது ஆச்சர்யமான ஒரு விஷயம்!

வெப்துனியாவைப் படிக்கவும்