ஓட்ஸ் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன...?

செவ்வாய், 30 நவம்பர் 2021 (11:32 IST)
ஓட்ஸ் பல ஆரோக்கிய நன்மைகளை தருகிறது. கூடவே உங்கள் உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு ஓட்ஸ் உணவுக்கு உண்டு.

 
ஓட்ஸ் உணவை தொடர்ந்து 7 நாள் எடுத்துக்கொள்ளும்போது உடல் எடையில் நல்ல மாற்றங்கள் இருக்கும். ஓட்ஸ் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் உடல் எடையை கணிசமாக குறைக்கலாம்.
 
வாரத்திற்கு ஒரு முறையாவது ஓட்ஸ் கஞ்சி, கூழ் போன்றவற்றை செய்து சாப்பிட்டு வருவது வயிற்றில் இருக்கும் நச்சுகள் வெளியேற செய்யும். செரிமான உறுப்புகள் நலம் பெறும்.
 
வாரமொருமுறை ஓட்ஸ் கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட்டு வருவதால் அவர்களின் அதீத ரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்து ஹைப்பர்டென்ஷன் பாதிப்பு  குறையும்.
 
ஓட்ஸில் பீட்டா குளுக்கன் என்கிற வேதி பொருள் மற்ற எந்த ஒரு உணவுப்பொருளையும் விட அதிகளவு நிறைந்திருக்கிறது. இந்த பீட்டா குளுக்கன்கள் உடலின் பல வகையான பிரச்சனைகளை தீர்க்கிறது.

அதிலும் குறிப்பாக உடலில் இருக்கும் நிண நீர் சுரப்பிகளை பலப்படுத்தி தொற்று நோய்கள், நுண்ணுயிரிகளால் ஏற்பட கூடிய நோய்கள் ஆகியவற்றிலிருந்து உடலை காக்கிறது.
 
ஓட்ஸ் சாப்பிடுபவர்களுக்கு இன்னும் அதிசீக்கிரத்தில் உடல் எடை குறைகிறது. நாம் சாப்பிடும் உணவுகளில் இருக்கும் கொழுப்பை உடலில் சேராமல் தடுக்கிறது.
 
குழந்தை முதல் வயதானவர்கள் வரை அனைவரும் உண்ணக்கூடிய ஒரு உணவாக ஓட்ஸ் இருக்கிறது. உடல்நலம் குன்றியவர்கள் எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய  உணவுகள் உண்ண வேண்டியிருக்கிறது. எனவே நோயாளிகளுக்கு ஏற்ற சிறந்த உணவாக ஓட்ஸ் இருக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்