நீச்சல் பயிற்சியினால் உடம்புக்கு என்னென்ன நன்மைகள்?

வெள்ளி, 11 நவம்பர் 2022 (21:22 IST)
நீச்சல் என்பது ஒவ்வொரு மனிதனும் கற்றுக்கொள்ள வேண்டிய இன்றியமையாத ஒன்று என முன்னோர்கள் கூறியுள்ளனர், நீச்சல் என்பது தண்ணீரில் நீந்திக் கடப்பதற்கு மட்டுமன்றி உடல் நலனுக்கும் நல்லது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்
 
நீச்சல் பயிற்சி செய்வதன் மூலம் உடலில் உள்ள கலோரிகள் குறையும் என்றும் அரை மணி நேரம் நீச்சல் பயிற்சி செய்தால் 350க்கும் மேற்பட்ட கலோரிகள் எரிக்கப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்
 
நீச்சல் பயிற்சியின்போது கை கால் மற்றும் தொடைப்பகுதியில் உள்ள தசைகள் வலிமை அடைவதாகவும் இதயம் நுரையீரல் ஆகியவை நன்கு வேலை செய்யும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் 
 
நீச்சல் பயிற்சி செய்தால் நன்கு பசி எடுக்கும் தூக்கம் வரும் மனதுக்கு மகிழ்ச்சியையும் ஆரோக்கியத்தையும் தரும் என்பதால் அனைவரும் நீச்சல் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது என்று அறிவுறுத்தப்படுகிறது
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்