ஆஸ்துமாவில் இருந்து நிவாரணம் பெற சில வழிமுறைகள்

புதன், 9 டிசம்பர் 2015 (13:43 IST)
ஆஸ்துமா ஒவ்வாமையால் தான் பெரும்பாலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. ஆஸ்துமாவை விரட்ட சில உணவுகளை தவிர்ப்பது அவசியம்.


 

 
பின்பற்ற வேண்டியவை:
 
1. குளீர் சாதனப் பெட்டியில் வைத்த எந்தப் பொருளையும் சாப்பிடக்கூடாது.
 
2. வாரம் ஒரு நாள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை உண்ணாவிரதம் இருக்க வேண்டும்.
 
3. அவ்வப்போது குடல் சுத்தம் செய்தல் வேண்டும்.
 
4. கோபம், கவலை, பயம் நீங்கி எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கப் பழகிக் கொள்ள வேண்டும். இரு வேளையும் தியானம் செய்து வரலாம்.
 
5. உடலுறவு மாதம் இரு முறை போதுமானது என்கிற மன நிலைக்கு வரவேண்டும்.
 
6. பால் மற்றும் பாலிலிருந்து தயாரிக்கப்பட்ட பொருட்களையும் அறவே விட்டுவிட வேண்டும்.
 
7. உளுந்தினால் செய்த பண்டங்களைத் தொடவே கூடாது.
 
8. யோகாசனம் செய்துவர வேண்டும்.
 
9. இரவில், சமையல் உணவை அடியோடு நிறுத்திவிட்டு பழங்கள் மட்டுமே சாப்பிட வேண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்