ஏசி அறையில் முடங்கி கிடப்பவரா நீங்கள்? வெயிலை வெறுக்காதீர்கள்......

ஞாயிறு, 9 ஏப்ரல் 2017 (20:08 IST)
பொதுவாக வெயில் என்றாலே யாருக்கும் பிடிக்காது. அதுவும் வெயில் காலத்தில் வெளியே செல்ல அனைவரும் வெயிலை பெரும் பிரச்சனையாக கருதி வருகின்றனர்.



 

 
வெயில் காலத்தில் சுரிய கதிர்கள் வெப்பமாக இருக்கும். ஆனால் வெயிலால் பல நனமைகள் உண்டு. வெயில் உழைத்து களைத்தவர்களுக்கு எந்த நோயும் தாக்குதலும் ஏற்படுவதில்லை. ஆனால் ஏசியில் அமர்ந்து வேலை செய்பவர்களை நோய்கள் எளிதாக தாக்கும்.
 
வெலியில் மனித உடலுக்கு பல்வேறு ஆரோக்கியத்தை அளிக்கிறது. வெயில் நம் மீது படும்போது நமது உடம்பில் உள்ள எலும்புகள் பலம் பெறுகின்றது. மூட்டு வலி உள்ளபவர்களுக்கு வெயில் ஒரு மருந்தாகும். தொற்று நோய் பரவல் கடும் வெயிலின் மூலமாகவே கட்டுப்படுத்தப்படுகின்றது.
 
வெயில் காலத்தில் தான் மரங்கள் நல்ல வளர்ச்சி பெருகின்றன. வெயிலால் உடம்பில் ஏற்படும் வியர்வை, உடல் கழிவுகளை வெளியேற்றுவதால் உடம்பில் ஆரோக்கியம் அதிகமாகிறது. இதனால் சிறுநீரகங்கள் செயல்பாடு நல்ல நிலையில் இருக்கும்.
 
இனி ஏசி அரையில் முடங்கி கிடக்காமல் வெயிலையும் அனுபவியுங்கள். உடல் ஆரோக்கியத்தை அதிகரியுங்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்