செரிமான பிரச்சனையை தீர்க்கும் பெருங்காயம்..!

திங்கள், 23 ஜனவரி 2023 (18:17 IST)
செரிமான பிரச்சனை உள்ளவர்கள் உணவில் பெருங்காயத்தை சேர்த்துக் கொண்டால் அந்த பிரச்சனை நீங்கிவிடும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 
 
உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் பெருங்காயம்  செரிமான பிரச்சனைக்கு தீர்வு அளிக்கிறது என்றும் கூறப்படுகிறது. வெங்காயம் பூண்டு ஆகியவற்றில் இருப்பதை விட அதிக மருத்துவ குணங்கள் பெருங்காயத்தில் இருப்பதாகவும் வயிறு வீக்கம். வயிறு வலி. குடல் புழுக்கள் ஆகியவற்றுக்கு பெருங்காயம் உடனடி தீர்வாக அமைகிறது என்றும் கூறப்படுகிறது. 
 
பெருங்காயத்தில் வைரஸ் எதிர்ப்பு மற்றும் அலர்ஜி ஆஸ்துமா சளி போன்ற சுவாசப் பிரச்சனைகளை சரி செய்கிறது என்றும் பெருங்காயம் உணவுடன் சேர்த்துக் கொள்வதால் மார்பு சளி நோய் குணமாகும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்