விஷத்தை முறிக்கும் தன்மை கொண்ட மிளகு!

வியாழன், 3 நவம்பர் 2016 (17:43 IST)
விஷத்தை முறிக்கும் தன்மை கொண்டது என்பதைக் குறிக்கவே பத்து மிளகு கையிலிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் என்றார்கள் முன்னோர்கள். காரணம் என்னவென்பதை கீழ் கண்டவற்றை படித்து தெரிந்து கொள்ளுங்கள்...
 

 
மூச்சுமுட்டு நோய், சுவாசக் குழாய் நோய்களுக்குச் சிறந்தது. தேனுடன் சேர்த்துக் கொடுக்கவேண்டும். தொண்டை வலிக்குத் தேனுடன் கொடுப்பார்கள். இது வாயு வருவதைத் தடுக்கும்.
 
தலைவலிக்கு இதை அரைத்துப் பற்று போடலாம். சில வறண்ட தோல் நோய்களுக்கு, மிளகுத் தைலம் சிறந்தது. இது பித்தத்தை அதிகரிக்கும். கபத்தைக் குறைக்கும்.
 
சிறு குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டாம். வெயில் காலத்தில் இதைப் பயன்படுத்த வேண்டாம். வயிற்றுப்புண், குடல் புண் உடையவர்கள் இதைப் பயன்படுத்த வேண்டாம். உஷ்ண வீரியமானது என்பதை நினைவில் கொள்ளவேண்டும். மரிசாதி தைலம், தாளிஸாதி சூரணம் போன்றவற்றில் எல்லாம் இது சேருகிறது.
 
மிளகுச் சூரணத்தைத் தேன் மற்றும் நெய்யுடன் சேர்த்துக் கொடுத்தால் காசத்துக்குச் சிறந்தது. மிளகுச் சூரணத்தை மோர் அல்லது தயிருடன் சேர்த்துக் கொடுத்தால் வயிற்றுப் போக்குக்கு நல்லது.
 
மிளகுச் சூரணம், சீரகம் மற்றும் தேனுடன் தினமும் இரண்டு வேளை எடுத்துக்கொள்வது மூல நோய்க்குச் சிறந்த சிகிச்சை. பல் நோய்களுக்கு மிளகுச் சூரணத்தை லவங்கத்துடன் சேர்த்து வைக்கலாம்.
 
மிளகுச் சூரணத்தை உணவுடன் எடுத்துக்கொள்வதால் அது சிரைகளிலும், தமனிகளிலும் ரத்த ஓட்டத் தடை ஏற்படாமல் தடுக்கும். இது ரத்த உறைதலையும் கட்டுப்படுத்தும்.
 
மிளகின் வெளிப்புறக் கருப்பு அடுக்கு, கொழுப்பின் காரணமாக உண்டாகும் உயிரணுக் களை முறிப்பதற்கு உதவுகிறது. எனவே, மிளகு கலந்த உணவைச் சாப்பிட்டு வருவதன் மூலம் எடையைக் குறைக்கலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்