குழந்தைகளின் பருமனான உடலால் ஏற்படும் ஆபத்தும் அதனை போக்கும் வழிமுறைகளும்

வெள்ளி, 27 நவம்பர் 2015 (15:36 IST)
பருமனற்ற உடலே பாதுகாப்பானது என்பதால், உடல் பருமனைக் குறைப்பதன் மூலம் பல்வேறு பாதிப்புகளைத் தவிர்க்கலாம்.


 

 
உடல் பருமனால் ஏற்படும் பாதிப்பு:
 

1. தற்போது 2 வயது முதல் 19 வயதுள்ளவர்களின் உடல் பருமனால் பாதிக்கப் பட்டோரின் எண்ணிக்கை 3 மடங்கு அதிகரித்துள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர்.
 
2. சிறுவர்கள் அதிக அளவில் பாதிப்புக்கு உள்ளாவதற்கு, அவர்கள் மைதானத்தில் விளையாடுவது குறைந்துவிட்டதும், ஆரோக்கியமற்ற அவசர உணவுகளை அதிகம் உட்கொள்வதுமே முக்கியக் காரணங்கள் என்கின்றனர் மருத்துவர்கள்.
 
3. சிறுவர்களை விளையாட அனுமதிக்காததால் கோகோ, கண்ணாமூச்சி, குதிரை தாண்டுதல் போன்ற பாரம்பரிய விளையாட்டுகள் மறைந்துவிட்டன. 
 
4. கணினி, ஸ்மார்ட்போன் மூலம் விளையாடியும், தொலைக்காட்சி முன்பு அமர்ந்தும் பொழுதைக் கழிக்கின்றனர். இவற்றைக் குறைத்து, ஓடி ஆடி விளையாடினால்தான் உடலில் இருந்து தேவையற்ற நீர் வெளியேற்றப்பட்டு, பசி தூண்டப்படும். உடல் வலிமையாகவும், சீராகவும் இருக்கும்.
 
5. உடல் பருமனுடையோர் ரத்த அழுத்தம், சர்க்கரை, சுவாசக் கோளாறு, மூட்டுவலி போன்ற உபாதைகளால் பாதிக்கப்படுவார்கள்.
 
உடல் பருமனைக் குறைக்க:
 
1. யோகா, உடற்பயிற்சி மிகவும் அவசியமானதாக உள்ளது.  இதனை தினமும் மேற்கொண்டால் மெலிந்த தேகத்தை பெறலாம்.
 
2. சத்துள்ள காய்கள், கீரைகள், தனியங்கள் போன்றவற்றை அதிகம் சாப்பிட வேண்டும்.
 
3. பால், இனிப்பு, கிழங்கு, இறைச்சி போன்றவற்றை அதிகமாக உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். குளிர்பானம், குளிர்ந்த நீர், ஐஸ்க்ரீம் இவற்றை தவிர்க்க வேண்டும். 
 
4. பசித்தால் மட்டுமே சாப்பிடுவது நல்லது.

வெப்துனியாவைப் படிக்கவும்