தினமும் 30 நிமிடங்கள் நடைபயிற்சி மேற்கொண்டால் கிடைக்கும் நன்மைகள்!!
நிறைய ஆய்வுகளில் தினமும் வாக்கிங் மேற்கொள்வது மிகவும் நல்லது என்று கூறுவதை படித்திருப்பீர்கள். அதில் சிலருக்கு உண்மையான காரணம் தெரிந்தாலும் பலருக்குத் தெரிந்திருக்காது.
பொதுவாக வாக்கிங் மேற்கொள்வதாலும், இடுப்பளவு மற்றும் தொப்பை பெருமளவு குறைவதோடு, உடல் ஆரோக்கியம் மேம்பட்டு, வாழ்நாளின் எண்ணிக்கையும் கூடும்.
தினமும் ஒருவர் 30 நிமிடங்கள் வாக்கிங் செல்வதால் கிடைக்கும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்துத் தெரிந்து கொண்டு, இனிமேல் வாக்கிங் செல்லுங்கள்.
* தினமும் வாக்கிங் செல்வதன் மூலம், இதய நோய்கள் மற்றும் பக்கவாதத்தால் அபாயம் குறையும் ஆய்வுகளும் வயதான காலத்தில் வாக்கிங் செல்வதால் இறப்பு சதவீதம் குறைந்துள்ளதாகக் கூறுகின்றன.
* நடைப்பயிற்சி இரத்த அழுத்தத்தைத் குறைப்பதோடு, இரத்த சர்க்கரை அளவில் உள்ள ஏற்றத்தாழ்வை சரிசெய்யும். ஆஸ்துமா மற்றும் சில புற்றுநோய்களின் வளர்ச்சியையும் தடுக்கும்.
* ஒருவர் தினமும் 30 நிமிடங்கள் நடப்பதன் மூலம் நல்ல மனநிலையை உணர வைக்கும் எண்டோபின்களின் வெளியீடு அதிகரித்து, மன அழுத்தம் மற்றும் பதற்றம் ஏற்படுவது குறையும்.
* தொடர்ச்சியான நடைபயிற்சி, எலும்புகளையும், தசைகளையும் வலிமையாக்கும். இதனால் எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் அடிக்கடி அவஸ்தைப்படுவதில் இருந்து விடுபடலாம்.
* உடல் எடையை மிகவும் எளிதில் குறைக்க உதவும் வழிகளுள் ஒன்று நடைப்பயிற்சி. ஒரு நாளில் ஒருவர் 30 நிமிடங்கள் வேகமான நடைபயிற்சியை மேற்கொண்டால், அதனால், 150 கலோரிகள் எரிக்கப்பட்டு உடல் எடையில் மாற்றம் தெரியும்.