மார்பக புற்றுநோய் வருமுன் காக்க என்ன செய்ய வேண்டும்?

Mahendran
சனி, 23 நவம்பர் 2024 (17:25 IST)
உலகம் முழுவதும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் அதிகரித்து வருகிறது. மார்பக புற்றுநோய் வருவதற்கு முன் அதை தடுப்பதற்கான சில முக்கிய விஷயங்களை தற்போது பார்க்கலாம்.
 
மார்பக புற்றுநோய் பெரும்பாலும் பரம்பரை வழியாக வரும் வாய்ப்பு அதிகம். அதனால் உங்கள் குடும்பத்தில் அம்மா, பாட்டி, அத்தை, போன்றவர்களுக்கு மார்பக புற்றுநோய் இருக்கின்றதா என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். இருந்திருந்தால், உடனடியாக மரபு வழி பரிசோதனை செய்து, புற்றுநோய் மரபணு இருக்கிறதா என்று சோதிக்க வேண்டும்.  
 
அடுத்ததாக, மார்பக புற்றுநோய்க்கு முக்கிய காரணமாக ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. ஈஸ்ட்ரோஜன் அதிகமாக இருப்பதால், பால் சுரக்கும் பகுதிகளில் உள்ள செல்கள் தூண்டப்பட்டு வளரத் தொடங்கும். எனவே, மார்பக புற்றுநோய்க்கான சந்தேகம் உள்ளவர்கள் ஈஸ்ட்ரோஜன் அளவை சோதனை செய்ய வேண்டும்.
 
50 வயதுக்கு மேல் மாதவிலக்கு நிற்காத பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் அதிகமாக இருக்கும்.   மாதவிலக்கு 50 வயதிற்கு பிறகும் தொடர்ந்து இருந்தால், பெண்கள் கண்டிப்பாக மார்பக புற்றுநோய் பரிசோதனை செய்ய வேண்டும்.
 
தாய்ப்பால் கொடுக்காத பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம். எனவே, தாய்ப்பால் கொடுக்காத அல்லது குறைந்த நாட்கள் மட்டும் கொடுத்த பெண்களும் மார்பக புற்றுநோய் பரிசோதனை செய்ய வேண்டும் என்று மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர்.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்