மாதவிலக்கு அல்லது மாதவிடாய் என்பது ஒரு பூப்படைந்த பெண்ணின் உடலில், கலவிமுறை இனப்பெருக்கம் தொடர்பாக, மாதந்தோறும் சுழற்சி முறையில் நிகழும் ஒரு உடலியங்கியல் மாற்றமாகும்.
நமது உடலின் கழிவுகள் எப்படி வெளியேறுகிறதோ அப்படியான ஒன்றுதான் பெண்களுக்கு ஏற்படும் மாத விலக்கு. பெண்களின் கருப்பையில் உள்ள கருமுட்டையும், அதனை பாதுகாக்க வேண்டி உருவாகும் மற்ற நீர்மங்களும் சிதைந்து பிறப்பு உறுப்பின் வழியே குருதிப்போக்கு ஏற்படுவதையே மாதவிலக்கு என்கிறோம்.