தேன் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?

வெள்ளி, 17 பிப்ரவரி 2023 (19:53 IST)
தேன் என்பது ரத்த ஓட்டத்திற்கு தேவையான ஆற்றலை தருகிறது என்பதால் தேன் சாப்பிட்டால் உடலுக்கு மிகுந்த நன்மை உண்டாகும் என்று கூறப்படுகிறது. 
 
தேனில் பலவகையான ஊட்டச்சத்துக்கள் உள்ளன, குறிப்பாக வைட்டமின் சி கார்போஹைட்ரேடுகள் அமிலங்கள் ஆகியவை அதிகம் உள்ளன. காயங்களை குணப்படுத்தவும் தேன் பயன்படுகிறது 
 
தோல் சருமங்களில் ஏற்படும் காயங்களில் தேன் தடவி வந்தால் விரைவில் குணமடையும். தூய்மையான தேன் தினமும் சாப்பிடுவதன் மூலம் நன்றாக தூக்கம் வரும், உடல் எடையும் குறையும், வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தேவையற்ற கொழுப்புகள் குறைந்து உடல் எடையை குறையும்
 
மேலும் இருமலுக்கு சிறந்த மருந்தாக தேன் உள்ளது. தொண்டை வலி, தொண்டை கரகரப்பு ஆகியவை இருந்தால் பாலில் தேன் கலந்து குடிப்பதன் மூலம் குணமாகலாம்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்