சீதாப்பழம் குளிர்ச்சியானதா?

Webdunia
செவ்வாய், 17 ஜூலை 2018 (19:01 IST)
சீதாப்பழம் இனிப்பு சுவையை உடைய பழம். மேலே பச்சை நிற தடித்த தோல் மற்றும் உள்ளே விதை பகுதியை சூழ்ந்த சதை பகுதி மென்மையானதாக இருக்கும்.
 
# இந்த பழம் ஒரு குளிர்ச்சியான பழம் ஆகும். இதனை எடுத்து கொள்வதால் உடலின் உட்புற வெப்ப நிலை குறைகிறது. ஆனால், இதனால் சளி பிடிக்கும் என்பது பொய்யான கூற்று. 
 
# அசீடோஜெனின், அல்கலைடு போன்ற கூறுகளை இந்த பழம் கொண்டுள்ளது. இந்த கூறுகள் புற்று நோயை உண்டாக்கும் அணுக்களின் வளர்ச்சியை குறைக்க உதவுகின்றன.
 
# சீதாப்பழத்தில் இரும்பு சத்து அதிகம் உள்ளது. இது இரத்தத்தின் ஹீமோகுளோபின் சுமக்கும் திறனை அதிகரிக்கிறது மற்றும் சோர்வையும் விரட்டுகிறது.
 
# சீதாப்பழத்தில் வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ் அதிகம் உள்ளது. இவை மூளையின் அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் திறன் கொண்டவை. 
 
# மேலும், செரிமான மண்டலம் சீராக இயங்க உதவுகிறது. இந்த பழத்தில் உள்ள நார்ச்சத்து உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றுகிறது. 
 
# சீதாப்பழத்தில் கலோரிகள் அதிகம் உள்ளது. அதனால் எடை அதிகரிக்க விரும்புவோர் இந்த பழத்தை தாராளமாக சாப்பிடலாம்.
 
# சீதாப்பழம் சருமத்தை ஆரோக்கியமாகவும் இளமையாகவும் வைக்க உதவுகிறது. தொடர்ந்து சீதாப்பழம் சாப்பிட்டு வருவதால், சருமத்தில் கொலோஜென் உற்பத்தி ஊக்குவிக்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்