தோல்தானேனு தூக்கி போடாதீங்க... ஆப்பிள் தோலின் சத்துக்கள்!!
சனி, 11 ஏப்ரல் 2020 (14:47 IST)
ஆப்பிள் மட்டுமல்ல ஆப்பிளின் தோலிலும் ஏராளமான சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. அவற்றை தெரிந்துக்கொள்ளுங்கள்...
ஆன்டி-ஆக்சிடண்டுகளும், ஃபிளாவனாய்டுகளும் ஆப்பிள் பழத்தோலில் அதிகம். இது இதய பிரச்சினைகளைச் சரிசெய்யும்.
ஆப்பிளை தோலுடன் சாப்பிட்டால் கண்புரை ஏற்படும் அபாயத்தை குறைத்து கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
ஆப்பிளின் தோலில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் அவை சிறுநீரக கற்கள் உருவாவதையும், உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாகுவதையும் தடுத்து உடல்பருமனை அதிகரிக்காமல் தடுக்கிறது.
ஆப்பிளின் தோலில் இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் அமிலம் நிறைந்து காணப்படுகிறது.
ஆப்பிளின் தோலில் உள்ள கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் துத்தநாகம் ஆகியவை கர்ப்ப காலத்தில் இரத்த சோகைக்கான ஆபத்தை குறைக்க உதவுகிறது.
ஆப்பிள் தோலில் பெக்டின் என்ற வேதிப்பொருள் கணிசமாக இருப்பதால், நம் உடலின் நச்சுக்களை நீக்குவதில் உதவுகிறது.