பெண்கள் ரெட் ஒயின் அருந்துவதால் ஏற்படும் நன்மைகள்: ஆய்வின் முடிவு

செவ்வாய், 25 அக்டோபர் 2016 (13:01 IST)
ரெட் ஒயின் அருந்துவதன் மூலமாகப் பெண்கள், தங்களுக்கு ஏற்படும் ஹார்மோன் பிரச்னையை சரிசெய்ய முடியும் என தெரியவந்துள்ளது.

 
இதுதொடர்பாக, அமெரிக்காவின் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் ஒர் ஆய்வை நடத்தி உள்ளனர். அதில், ரெட் ஒயின், திராட்சைப்பழம், சாக்லேட், பாதாம், பிஸ்தா போன்ற புரதச்சத்து நிறைந்த உணவுப்பொருட்களை அதிகளவு சாப்பிடும் பெண்களுக்கு, ஹார்மோன் சுழற்சி சீராகவும், பிரச்னை ஏதுமின்றி, இயல்பாகவும் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
 
இவ்வகை உணவுப்பொருட்களில் உள்ள பாலிஃபீனால் என்ற வேதிப் பொருள், ஹார்மோன் செயல்பாட்டை சீராக வைக்க உதவுகிறது. இதன்மூலமாக, உடல் எடை அதிகரிப்பு, மாதவிடாய் பிரச்னை, முடி கொட்டுதல், சரும பிரச்னை உள்ளிட்ட பிரச்னைகளை எளிதில் தீர்க்க முடிவதாகவும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
 
குறிப்பாக, அதிக உடல் எடை காரணமாக நீரிழிவு நோய் ஏற்படுவதை முற்றிலுமாக தடுக்க இந்த பாலிஃபீனால் பயன்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்