ஆஸ்துமா பிரச்சனையா?? இந்த மூச்சு பயிற்சியை பண்ணுங்க!!

Arun Prasath

ஞாயிறு, 12 ஜனவரி 2020 (16:09 IST)
சைனஸ், ஆஸ்துமா, மூக்கடைத்தல் போன்ற பிரச்சனைகளுக்கு கபாலபதி கிரியா மூச்சுப் பயிற்சி மிகவும் உதவுகிறது.

குளிர் காலங்களில் பலருக்கும் மூக்கடைப்பு, சைனஸ், ஆஸ்துமா, சளி பிரச்சனை போன்ற மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும் பிரச்சனைகள் ஏற்படுவது உண்டு. இதனை ஓரளவு குறைப்பதற்கு கபாலபதி மூச்சு பயிற்சி உதவுகிறது.

மூச்சை மெதுவாக மூக்கு வழியாக உள்ளே இழுத்து, பின்பு மெதுவாக வெளியே விட வேண்டும். இவ்வாறு ஒரு நிமிடத்திற்கு 120 முறை மூச்சை வெளியேற்ற வேண்டும். இந்த பயிற்சி செய்வதால் நுரையீரலில் தேங்கியிருக்கும் கழிவுகள் வெளியேறுகின்றன. இதனால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுதல் குறையும். இதனை தினமும் 10-15 நிமிடங்கள் செய்தால் நல்ல பலன் தரும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்