பனைவெல்லத்தைவிடவும், கரும்பில் இருந்து எடுக்கப்படும் வெல்லத்தில் இரும்புச் சத்து அதிக அளவில் உண்டு. 100 கிராம் வெல்லத்தில் 2.64 மில்லி கிராம் இரும்புச் சத்தும், 80 மில்லி கிராம் கால்ஷியமும் உள்ளது. இரண்டும் சேரும் போது உடலுக்கு நல்ல வலு கிடைக்கும்.
இது தவிர பொட்டாஷியம், சோடியம், கால்ஷியம், பாஸ்பரஸ், மாங்கனீஸ் மற்றும் துத்தநாகம் ஆகியவையும் வெல்லத்தில் உண்டு.
ஓமம், மிளகு, வெல்லம் மூன்றையும் சம அளவில் எடுத்துப் பொடி செய்து, காலை மற்றும் இரவு அரைத் தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால், வயிற்றுக் கடுப்பு தீரும் குடல் புழுக்களைக் கட்டுப்படுத்த அதிகாலையில் வெல்லத்தை சிறிது அளவு உட்கொள்ளலாம்.