முதுகெலும்பு அறுவை சிகிச்சைக்கு நவீன மேஜை

வெள்ளி, 18 ஜூலை 2008 (17:55 IST)
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் முதுகெலும்பு அறுவை சிகிச்சைக்கு 40 லட்சம் ரூபாய் செலவிலான நவீன மேஜை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை ஆலோசகர் டாக்டர் சஜன் ஹெக்டே, டர்விட்ரான் நிறுவன இயக்குனர் டாக்டர் ஜி.எஸ்.கே.வேலு ஆகியோர் கூறுகையில், முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை, மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மற்றும் ஆர்த்தோபேடிக் அவசர அறுவை சிகிச்சைகளுக்கு இந்த மேஜை பயன்படுத்தப்படும் என்று தெரிவித்தனர்.

இந்த மேஜைக்கு `ஜேக்ஸன் ஸ்பைனல் டேபிள்' என்று பெயர். அறுவை சிகிச்சையின்போது நோயாளிகளை பாதுகாப்பாக வைப்பதற்கும், தானாகவே மசாஜ் செய்வது மற்றும் 360 டிகிரி சழலும் வசதி உள்பட பல்வேறு வசதிகளுடனும் இந்த மேஜை உருவாக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கூறினர்.

அறுவை சிகிச்சையின்போது நோயாளியின் முன்பக்க, பின்பக்க, பக்கவாட்டு தோற்றங்களையும், முதுகெலும்பின் குறுக்குவெட்டு தோற்றங்களையும் பார்ப்பதற்கு ஏதுவாக இருப்பதால் அறுவை சிகிச்சை நிபுணர்கள் இந்த நவீன மேஜையை பெரிதும் விரும்புகிறார்கள்.

தெற்காசியாவிலேயே இந்த வகை மேஜை அப்பல்லோ மருத்துவமனையில்தான் நிறுவப்பட்டுள்ளதாக அவர்கள் மேலும் கூறினர்.

வெப்துனியாவைப் படிக்கவும்