பாட்டுடன் கணிதம்: ஆசிரியரின் புதிய யுக்தி

செவ்வாய், 16 டிசம்பர் 2008 (18:50 IST)
கணிதத்தில் சில விதிகளை மாணவர்கள் மனப்பாடம் செய்வதற்கு கஷ்டப்படுவதைக் கருத்தில் கொண்டு, கணிதத்துடன் பாடலைச் சேர்ந்து சுவாரஸ்யமாக கற்றுக் கொடுக்கும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளார் கலிஃபோர்னியாவைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர்.

அல்ஜீப்ரா விதிகளை கற்றுக் கொள்வதில் மாணவர்கள் அடைந்த சிரமங்களை அறிந்து, இரவு முழுவதும் யோசித்த பின் பாடல் ஒன்றை எழுதி கணித விதிகளுடன் சேர்த்ததாக அலெக்ஸ் கஜிதானி என்ற ஆசிரியர் கூறினார்.

மாணவர்களின் கஷ்டத்தை உணர்ந்து, அதற்கு தீர்வு காண வேண்டும் என்று தாம் கருத்தியதன் அடிப்படையிலேயே புதிய யுக்தியை உருவாக்கியதாகவும் அவர் கூறினார்.

அல்ஜீப்ரா கணிதத்தில் எண்களை கூட்டவும், கழிக்கவும், `Itty Bitty Dot' என்று தொடங்கும் பாடலை அலெக்ஸ் எழுதினார்.

அவரது இந்த முயற்சி மாணவர்களிடையே நல்ல வரவேற்பை ஏற்படுத்தியது. `சங்கீதத்துடன் கணிதம்' படிப்பது மாணவர்களுக்கு மகிழ்ச்சியாக அமைந்ததுடன் கணிதத்தில் உள்ள கடினமான சூத்திரங்களையும் எளிதில் நினைவில் வைத்துக் கொள்ள உதவியதாம்.

அதேபோன்ற தற்போது 26 பாடல்களை பல்வேறு கணித விதிகளுக்கு உருவாக்கியுள்ளாராம் அலெக்ஸ். இவரைப் போன்ற ஆசிரியர்கள் இந்தியாவிலும் இருந்தால் பாராட்டலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்