இதயத்தினுள் பொருத்திய ஃபேஸ்மேக்கரை சேதப்படுத்த முடியும்

சனி, 19 ஜூலை 2008 (13:36 IST)
இதய பாதிப்பு உடையவர்களின் இதயத் துடிப்பை சீராக இயங்கச் செய்வதற்கு அவர்களின் இதயத்தினுள்ளே பொருத்தப்படும் சிறியதொரு கருவியே ஃபேஸ்மேக்கர்.

ஒருமுறை அறுவைச் சிகிச்சை மூலம் ஃபேஸ்மேக்கர் கருவி பொருத்தப்பட்டு விட்டால், அந்தக் கருவி குறித்து கவலை கொள்ள வேண்டியதில்லை என்று தான் நினைப்போம். ஆனால் இதயத்தில் பொருத்தப்பட்ட அந்த கருவியை கணினிகளை பாதிப்படையச் செய்வதைப் போல், சேதப்படுத்த முடியும் என்று தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற ஃபேஸ்மேக்கர் கருவியை சேதப்படுத்தும் முயற்சியில் வெற்றிபெற்ற டாக்டர் வில்லியம் மைசெல் மற்றும் அவரது குழுவினர், ஃபேஸ்மேக்கர் கருவிகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மிகுந்த கவனத்துடன் செயல்படுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். எனவே அந்த நிறுவனங்கள் தங்களின் ஃபேஸ்மேக்கர் கருவிகளை பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் என்று அவர்கள் கூறினர்.

இப்போதைக்கு இதய நோயாளிகள் கவலையடையத் தேவையில்லை என்றாலும், சமுதாயத்தில், இந்த தகவலை தெரிவிக்க வேண்டியது அவசியம் என்று டாக்டர் வில்லியம் கூறினார்.

மாஸாசூட்ஸ் பல்கலைக்கழகம் மற்றும் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள் இணைந்து, இதயத்தினுள் பொருத்தப்பட்ட ஃபேஸ்மேக்கர் கருவியில் அதிர்வை ஏற்படுத்த முடியும் என்று கண்டறிந்து உள்ளனர்.

ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்களும், மருத்துவ கருவி பாதுகாப்பு மையமும் இணைந்து, இதயத்தில் உள்ள ஃபேஸ்மேக்கர் கருவியை ஒரு அங்குலம் அளவுக்கு நகர்த்த முடியும் என்று கண்டுபிடித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்