பகுதி 3 - IVF எனும் செயற்கை கருத்தரிப்பும் அக்குபஞ்சரும்!!

சனி, 18 ஜூன் 2016 (15:31 IST)
செயற்கை கருத்தரிப்பு முறையில் வரும் இன்னொரு பெரிய பிரச்சினை இடமகல் கருப்பை அகப்படலம் ( என்டோமெட்ரியோசிஸ் - Endometriosis ).


 


மலட்டுத்தன்மை பாதிப்பு இருக்கும் பெண்களுக்குத்தான் இந்த என்டோமெட்ரியோசிஸ் பிரச்சினை வர வாய்ப்பு அதிகமாக இருக்கும்!. 
 
கர்பப்பையின் உட்புற சுவரின் இருக்கும் எண்டோமேட்ரியல் திசு கற்பப்பைக்கு வெளிப்புறம் வளர்ந்துவிடுவதால் இது என்டோமெட்ரியோசிஸ் என்று அழைக்கப்படுகிறது. இது கர்பப்பையின் வெளிப்பக்கத்தில் எங்கு வேண்டுமானாலும் வளரக்கூடியது. குழந்தை பெறமுடியாத பாதிப்புகள் ஏற்படுத்தும் இதற்கு, ஹார்மோன்கள் பக்கபலமாக இருக்கின்றது. முறையே ஈஸ்ட்ரோஜன்கள், புரஜெஸ்ட்ரோன்கள் துணை நிற்கிறது. 
 
மாதவிலக்கின்பொழுது அதிக வலி ஏற்படுவது இதன் அறிகுறியே, சில பெண்களுக்கு அந்த வலியும் சில நேரங்களில் துளியும் இருக்காது. இதனால் பெரிதும் பாதிப்பு மலட்டுத்தன்மையாக வெளிப்படும். உடல் அகநோக்கியியல் (laparoscopy) சோதனைகள் மூலமாகத்தான் பரிசோதனை செய்து உறுதிப்படுத்த முடியும். 
 
இந்த பிரச்சினை உள்ளவர்கள் In Vitro Fertilization எனும் செயற்கை கருத்தரிப்பு முறையின் மூலம் குழந்தை பெற்றெடுக்க முடியும்!. இந்த IVF முறையில் குழந்தை பெற முயற்சி செய்யும்பொழுது  அக்குபங்க்சர் சிறந்த முறையில் ஊன்றுகோலாக துணை நிற்கிறது. ஹார்மோன்களை கட்டுக்குள் வைக்கவும், அதன் நிலையை சமமாக்கும் சக்தியும் அக்குபங்க்சர் மருத்துவத்தினால் மருந்து மாத்திரைகள் இல்லாமல், பின்விளைவுகள் ஏற்படாதவாறு முடியும். 
 
IVF எனும் செயற்கை கருத்தரிப்பும் அக்குபங்க்சரும் தொடரும்.....
 
-த.நா.பரிமளச்செல்வி,
அக்குபங்க்சர் மருத்துவர்
 








வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்