இரவு ஷிப்ட் வேலை செய்பவர்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்

புதன், 15 மார்ச் 2017 (01:17 IST)
சென்னை போன்ற பெருநகரங்களில் தற்போது இரவு ஷிப்ட்களில்தான் பணிபுரிகின்றனர். குரிப்பாக ஐடி அலுவலகம், காவல்துறை செக்யூரிட்டி, வாட்ச்மேன் போன்ற பணியில் இருப்பவர்கள் இரவு ஷிப்டை தவிர்க்க முடியாது. இரவு ஷிப்டில் பணிபுரிவது உடல் நலத்திற்கு தீங்குதான். ஆனால் அதே நேரத்தில் கைநிறை சம்பளத்துடன் கூடிய இரவு ஷிப்ட் வேலையை விட மனம் இல்லாதவர்கள் தங்களுடைய வாழ்க்கை முறையை மாற்றிக்கொண்டால் ஒருசில உடல் உபாதைகளில் இருந்து தப்பிக்கலாம். அவை என்னென்ன என்பதை பார்ப்போம்



 


1. முதலில் இரவு ஷிப்ட்களில் பணிபுரிபவர்கள் பணி முடிந்த பின்னர் டூவீலரில் வீட்டுக்கு வருவதை தவிர்க்க வேண்டும். இரவு முழுவதும் தூங்காமல் பணி செய்ததால் வண்டி ஓட்டும்போது தூக்கம் வந்து விபத்து ஏற்பட வாய்ப்பு உண்டு. பஸ், கார், அல்லது கேப் ஆகியவற்றில்தான் வீடு திரும்ப வேண்டும். முடிந்தால் பயணத்தின்போது தூங்கலாம்

2. இரவு ஷிப்ட் பணிபுரிபவர்கள் சூரிய உதயத்திற்கு முன்னர் அதாவது உடலில் வெயில் படுவதற்கு முன்னர் வீட்டிற்கு வந்துவிட வேண்டும். காலை வெயில் உடலில் பட்டால் அப்புறம் தூக்கம் வராது.

3. இரவு ஷிப்ட் முடிந்து வீட்டுக்கு வந்ததும் டிவி பார்ப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். நாளிதழ்களின் தலைப்பு செய்தியை மட்டும் பார்த்து கொள்ளலாம்.

4. இரவு ஷிப்ட்டில் பணிபுரிபவர்கள் வீட்டுக்கு வந்ததும் டீ, காபியை அறவே தவிர்க்க வேண்டும். வேண்டுமென்றால் பால் சாப்பிடலாம்
பின்னர் சில நிமிடங்கள் கழித்து எளிதில் ஜீரணம் ஆகும் இட்லி, இடியாப்பம் போன்ற உணவுகளை எடுத்து கொள்ளலாம்

5. காலை உணவை முடித்ததும் ஒரு அரை மணி நேரம் ரிலாக்ஸ் செய்துவிட்டு தூங்க செல்ல வேண்டும்

6. படுக்கை அறையில் கண்டிப்பாக இருட்டு இருக்கும்படி பார்த்து கொள்ள வேண்டும். கதவு ஜன்னல்களை இறுக்கமாக மூடிவிட வேண்டும். இருளில்தான் டோபமைன் என்ற ஹார்மோன் சுரந்து ஆழ்நிலை தூக்கத்துக்கு வழிவகுக்கும்

7. தூங்கும்போது கண்டிப்பாக செல்போனை அருகில் வைக்க வேண்டாம். அதில் இருந்து வெளிவரும் ரேடியேஷன் உடலுக்குள் பாய்ந்து தூக்கத்தை கெடுக்கும்.

8. தூங்குவதற்கு முன்னர் செல்போனில் ஃபேஸ்புக், டுவிட்டர் போன்றவற்றை உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும். இதனால் தேவையில்லாத விவாதங்களை தவிர்ப்பதோடு உடல்நலனும் பாதுகாக்கப்படும்

9. மாலையில் எழுந்து ஃபிரஷ் ஆகி சப்பாத்தி போன்ற உணவை சாப்பிடலாம். அதன் பின்னர் அலுவலகம் செல்வதற்கு முன்னரும் லைட்டாக சாப்பிட்டு கொள்ளலாம்.

10. பணி நாட்களில் அசைவ உணவை தவிர்ப்பது நல்லது. விடுமுறை தினங்களில் அசைவ உணவை சாப்பிட்டு கொள்ளலாம்

மேற்கண்ட வழிமுறைகளை இரவு ஷிப்டில் பணிபுரிபவர்கள் கடைபிடித்து வந்தால் பகல் ஷிப்டில் வேலை செய்பவர்களுக்கு நிகரான உடல் ஆரோக்கியத்தை பெறலாம்
 

வெப்துனியாவைப் படிக்கவும்