அஜீரணத்தால் ஏற்படும் பிரச்சனைகள் அதனை தீர்க்கும் வழிகள்

வியாழன், 17 மார்ச் 2016 (15:52 IST)
நாகரீக உலகில் பல நோய்களுக்கு முக்கிய காரணமாக விளங்குவதுதான் இந்த அஜீரணம்! 


 
 
நாம் உண்ட உணவு செரிக்காமல் இருப்பதைதான் அஜீரணம் என்கிறோம்.
 
1. வயிறு உப்பசம்
2. புளி ஏப்பம்
3. வாய் துர்நாற்றம்
4. பசி இன்மை
5. அடிக்கடி கொட்டாவி
6. நெஞ்சுக் கரிப்பு
7. மலச்சிக்கல்
8. வாயிற்று வலி
9. குமட்டல், வாந்தி இவை அனைத்தும் அஜீரணத்தின் அறிகுறிகள் ஆகும்.
 
இந்த அஜீரணம் ஏன் வருகிறது என்று பார்க்கும்போது அதற்கு காரணம்
 
* நாம் உணவை அதிக அளவில் உண்பது 
* உணவை நன்றாக மென்று சாப்பிடாமல் விழுங்குவது
* போதிய அளவு நீர் அருந்தாமை
* சாப்பிட்ட உடன் அதிக நீர் அருந்துவது.
* சரியான தூக்கம் இல்லாமை
* மாமிச உணவுகளை அதிகம் உண்ணுதல்
 
இத்தகைய அஜீரண கோளாறு நீக்கப்படக்கூடிய ஒன்று தான் என்றாலும் இந்த அஜீரணத்தின்போது கணவன் மனைவி உடலுறவு இருக்கவே கூடாது 
 
என்று முன்னோர் கூறுகின்றனர். இதனால் அறிவு மந்தமான குழந்தைகள் பிறக்க வாய்ப்பு இருப்பதாக கூறுகின்றனர்.
 
இந்த அஜீரணத்தை தீர்க்க:
 
* கொய்யாப்பழம் (250) கிராம்கள் உணவுக்குப்பின் எடுத்துக்கொள்ள வேண்டும்
* எலுமிச்சை சாறு மிகவும் பயன் தரும், இதனுடன் ஒரு சிட்டிகை உப்பும், ஒரு தேக்கரண்டி இஞ்சி சாரும் கலந்து அருந்தலாம்.
* சுடு தண்ணீர் ஒத்தடம் வயிற்றின் மீது கொடுத்தாலும் அஜீரண கோளாறு நீங்கும்.
* சாப்பிட்ட உடன் அரை குவளைக்கு மிகாமல் சுடு தண்ணீர் அருந்துவது நல்லது.
* பப்பாளி பழத்தை காலை உணவாக தொடர்ந்து (20) நாட்களுக்கு உண்டுவந்தால் இந்த அஜீரணம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.
 
-அக்குபஞ்சர் மருத்துவர் த.நா.பரிமளச்செல்வி

வெப்துனியாவைப் படிக்கவும்