இன்று 40 வயதுக்கு மேற்பட்ட பெரும்பாலானோர்களுக்கு இருக்கும் பிரச்சனை தொப்பை. இதனால் உருவ அழகு கெடுவதோடு, சுறுசுறுப்பாகவும் இயங்க முடியாது.இந்த தொப்பை என்றால் என்ன? இதை கரைப்பது எப்படி? என்பது குறித்து பார்ப்போம்
தொப்பை உண்டாக முக்கிய காரணங்கள்:
.1. எண்ணெய் பலகாரங்கள், ஜங்க் ஃபுட்ஸ், கொழுப்புச்சத்து அதிகம் உள்ள உணவுகள், அதிகளவு எடுத்து கொள்ளப்படும் கார்போனேட்டட் பானங்கள்
2. நார்ச்சத்து குறைந்த உணவு குறைபாடு
3. உடற்பயிற்சி, உடல் உழைப்பு இன்மை.
4. மனஅழுத்தம், சோகம், கோபம் காரணமாக அதிகமாகச் சாப்பிடுதல்.
1. முட்டை, பாதாம், ஓட்ஸ், யோகர்ட், பால், புரொக்கோலி, பச்சைக்காய்கறிகள், மீன், இறைச்சி, கீரை வகைகள், முளைக்கட்டிய பயறு, கடலை, பீன்ஸ் போன்ற புரதம் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
3. தினசரி உடற்பயிற்சி, நடைப்பயிற்சி செய்ய வேண்டும்
4. அடிவயிற்று பயிற்சிகள், யோகாசனங்கள், சிட் அப் ஆகிய பயிற்சிகளை ரெகுலராக செய்வதால் அடிவயிற்றில் உள்ள சதையைக் குறைக்கலாம்.