தலைவலி இல்லா மனிதனை காண்பது மிக அரிதாகிவிட்டது. இரத்த ஓட்டத்தில் மாறுதல்கள் நம் உடலின், மனதின், உணர்வின் மூலமாக ஏற்பட்டு தலைவலி உண்டாகிறது.
இப்படி வரும் தலைவலிக்கு மருந்தோ, மாத்திரையோ இல்லாமல் அக்குபிரசர் / அக்குபங்க்சர் மருத்துவ முறையின் மூலம் நம்மை நாமே சரி செய்து வலியிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும். அக்குபிரசர் / அக்குபங்க்சர் ஒரு மருந்தில்லா மருத்துவ முறை மட்டுமல்ல பக்கவிளைவுகளற்ற மருத்துவ முறையுமாகும்.
மிக கடுமையான தலைவலியோ, மயக்கமோ, மங்கிய பார்வையோ ஏற்படின் தகுந்த மருத்துவரை கண்டு ஆலோசித்தல் நலம் பயக்கும்!