மது அருந்துவதற்கு இடைவெளி கொடுத்தால் சீரடையும் ஆரோக்கியம்!
திங்கள், 16 நவம்பர் 2015 (18:03 IST)
தண்ணியடிப்போர்களே! தினமும் அடிப்பதை ஒரு தொழிலாகக் கொண்டவர்களுக்காகவே ஒரு ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. கொஞ்சம் பிரேக் கொடுங்களேன், ஆரோக்கியம் சீரடைவதோடு, குடித்ததால் ஏற்படும் சேதமும் சீரடைகிறதாம்!
மது அருந்துவதால் ஆய பயன் என்ன? போதையைத் தவிர அதனால் ஒன்றுமில்லை. அதில் உள்ள கலோரிகள் வெற்றுக் கலோரிகள், அதனால் எந்த ஒரு பயனும் இல்லை. மாறாக அந்தக் கலோரியை எரிக்க இரண்டு மணிநேரம் பயிற்சி தேவைப்படுகிறதாம்!
தண்ணியடித்து விட்டு பயிற்சி செய்வது தமாஷாக இருக்கும்! ஆனால் அதுவல்ல விஷயம், நாம் தண்ணியுடன் சேர்த்து சிக்கன், மட்டன், பீஃப் என்றெல்லாம் உள்ளே தள்ளும் நபர்களைப் பார்க்கிறோம், இதெல்லாம் அதிக கலோரிகள், ஏற்கனவே மதுவினால் கலோரி அதிகரிப்பு இந் சைட் டிஷ்களால் கலோரி அதிகரிப்பு இதனால் என்ன உபரி கலோரியை எரிக்க முடியாமல் போகும்போது கடும் 'ஹேங் ஓவர்' வருகிறது.
எனவே ஒரு குறுகிய கால பிரேக் கொடுத்தால் கூட போதும் அதாவது ஒரு இரண்டு அல்லது மூன்று வாரம் நிறுத்துவதால் உடலில் நச்சுக்கள் வெளியேறுகிறது.
உடலில் உள்ள நீர் சத்தையெல்லாம் உரிஞ்சுவதுதான் ஆல்கஹால் செய்யும் வேலை, இதனால்தான் நீண்ட நாளைய குடிகாரர்களின் கன்னங்கள், உதடுகள் மற்றும் உடல் சருமமே தடித்தனமாக கர்ண கொடூரமாக மாறிவிடுகிறது என்று கூறுகிறார்கள் நிபுணர்கள். மது அருந்துவதை நிறுத்தினால் உடலின் நீர்ச் சத்து பாதுகாக்கப்படுகிறது.
அதிகமாக தண்ணி கலந்தே மது அருந்துகிறோம் என்று கூறுபவர்களின் குரகள் கேட்கின்றன. அதனால் எந்த வித பயனும் இல்லை. சூடான தோசைக்கல்லில் தண்ணீரை டெளித்தால் என்ன ஆகும் அது ஆவியாகும் அவ்வளவே எவ்வளவு தண்ணி ஊத்தி அடித்தாலும் ஆல்கஹால் சூடான தோசைக்கல் போல்தான்.
மது அருந்தினால் நன்றாக தூக்கம் வரும் என்பது மற்றுமொரு பொய். தூங்கிக் கொண்டேயிருப்போம் திடீரென அகாலத்தில் விழிப்பு வரும், மருட்சிக் காட்சிகள் தெரியும். அகாலத்தில் விழிப்பு வந்தால் பிறகு தூக்கம் வர ஒரு மணி நேரம் அல்லது 2 மணி நேரம் ஆகலாம், சிலருக்கு தூக்கம் அம்போபாகக் கூட போய்விடும்.
குடிப்பதை சில நாட்களுக்கு விட்டொழியுங்கள் என்ன ஆகிறது என்று பார்ப்போம், எப்போதும் ஆல்கஹாலின் நச்சுக்களையே வெளியேற்றும் வேலையிலிருந்து லிவர் காப்பாற்றப்படும்.
எல்லா வகை மதுவிலும் உள்ள சர்க்கரை மற்றும் வெற்றுக் கலோரிகளே தொந்தி விழக் காரணம்.
அனைத்திற்கும் மேலாக இளைஞர்கள் திருமணமானவர்கள் ரெகுலராக குடிப்பதால் தாம்பத்திய உறவிலும் சிக்கல் ஏற்படுகிறது.
இருதயம் ஆல்கஹாலினால் அதிக வேலைப்பளுவை செய்கிறது. இதனால் பல்ஸ் ரேட் அதிகரிக்கிறது இதனால் பயிற்சி செய்ய முடிவதில்லை. தண்ணி அடிக்காவிட்டால் பல்ஸ் ரேட் சீராக இருக்கும் உடற்பயிற்சி செய்ய வசதியாக இருக்கும்.
ஆகவே குடிமக்களே கொஞ்சம் ஓய்வு கொடுத்துப் பாருங்களேன், காலைகள் புத்தம் புதுக் காலையாக மலரும்.