முகப்பருவை (Acne) போக்கும் அக்குபஞ்சர்!!

சனி, 24 செப்டம்பர் 2016 (12:23 IST)
இளமைப்பருவம் அடியெடுத்து வைக்கும் அனைவருக்கும் இந்த பிரச்சனை ஒருமுறையேனும் வந்து எட்டிப்பார்த்துவிட்டு போய்விட்டிருக்கும்!! முகத்தில் ஏற்படக்கூடிய சிறு கட்டிகளே முகப்பரு என்றழைக்கப்படுகிறது. ஆண் பெண் இருபாலருக்கும் இது ஏற்படுவதுண்டு.


 
 
ஹார்மோன்களின் மாற்றம்தான் இந்த முகப்பரு. எண்ணெய் சுரப்பிகள் அதிக அளவில் சுரக்கும்பொழுது இந்த கட்டிகள் உருவாகின்றன. எண்ணெய் தன்மை கொண்ட தோல் உடையவர்களை (Oily Skin) முகப்பரு குறி வைக்கிறது. 
 
இந்த முகப்பருவானது ஹார்மோன்களில் மட்டுமேயன்றி மன அழுத்தம், தவறான மருந்துங்கள், எண்ணெய் தன்மை கொண்ட தோல், அதிகப்படியான வெப்பம், ஆகிய காரணங்களாலும் வருகிறது. அஜீரணம் என்ற மிகப்பெரிய காரணமும் இதனுள் அடங்கும், தினமும் மலம் கழிக்காமல் மலச்சிக்கல் இருப்போருக்கும் இது ஏற்படும். அதிகம் எண்ணெய் தன்மை கொண்ட உணவுகள், மைதா, வெள்ளை சர்க்கரை போன்ற உணவுகளை தவிர்த்து விட்டாலே இதன் பெறும் பாதிப்பில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம். 
 
இத்தகைய முகப்பருவை முற்றிலுமாக காப்பிங் மற்றும் குத்தூசி சிகிச்சை எனப்படும் அக்குபஞ்சர் போன்ற மாற்று முறை சிகிச்சை மூலம் தீர்த்துவிடலாம். 
 
கீழ்காணும் அக்கு புள்ளிகளை, உங்கள் ஆள்காட்டி விரலாலோ அல்லது கட்டை விரலாலோ ௭ (7) முறை கடிகார சுற்றும் ௭ (7) முறை எதிர் கடிகார சுற்று முறையிலும் அழுத்தம் கொடுப்பது முகப்பருவை (Pimples) போக்கும் எளிய வழிமுறை! 
 
அக்கு புள்ளிகள்: LU 5, LI 4, ST 36, ST 37, ST 25, Liv 3, Ren 4, Ren 6 
 
-த.நா.பரிமளச்செல்வி, 
அக்குபஞ்சர் மருத்துவர் 

 
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்