பெரும்பாலான பெண்கள் தூங்கச் செல்லும் போது நைட்டி உடை மாறிவிடுகின்றனர். ஆனால் அவர்கள் தங்களுடைய உள்ளாடைகளைப் பற்றிக் கண்டு கொள்வதே கிடையாது. இது முற்றிலும் தவறு. தூங்கச் செல்லும்போது, இறுக்கமான உடைகளை அணியகூடாது. குறிப்பாக உள்ளாடைகளை நீக்கிவிட்டு தூங்கச் செல்வது சிறந்தது.
5. கர்ப்பிணி பெண்களாக இருந்தால் மாலை அல்லது இரவில் அதிக அளவு தண்ணீர் அல்லது பானங்கள் குடிப்பதை தவிர்க்கலாம். இரவில் அடிக்கடி சிறுநீர் வருவதைத் தவிர்க்கலாம். இதனால் இரவில் தூக்கம் தடைபடாது. ஆனால் அதே நேரத்தில் குழந்தையும், தாயும் நன்கு ஆரோக்கியமாக இருப்பதற்கு தண்ணீர் மற்றும் நீர்ம பானங்கள் அவசியம் தான். ஆனால் அத்தகைய பானங்களை பகல் வேளையில் அதிக அளவில் குடிக்க வேண்டும்.