ரோட்டாவைரஸ் வயிற்றுப்போக்கு! அதிகரித்து வரும் குழந்தைகள் மரணமும்

வெள்ளி, 28 அக்டோபர் 2011 (12:31 IST)
உலகம் முழுதும் மரணமடைந்த குழந்தைகளின் விகிததத்தில் பெருமளவு தாக்கம் செலுத்தியுள்ளது ரோட்டாவைரஸினால் ஏற்படும் வயிற்றுப்போக்கு என்று ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

குறிப்பாக இந்தியாவில் 2008ஆம் ஆண்டு மட்டும் 5 வயதுக்குட்பட்ட சுமார் 1 லட்சம் குழந்தைகள் ரோட்டாவைரஸினால் ஏற்பட்ட வயிற்றுப்போக்கிற்கு பலியாகியுள்ளனர். அதாவது மொத்த மரணத்தில் 22% இந்தியாவில்!

இந்தத் தகவல்களை லான்செட் என்ற பிரபல மருத்துவ பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.

2008ஆம் ஆண்டு உலகம் முழுதும் ரோட்டாவைரஸ் வயிற்றுப்போக்கிற்கு 4,53,000 பேர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் 37% வயிற்றுப்போக்கு சாவுகள் 5 நாடுகளில் நிகழ்ந்துள்ளன.

இந்த 5 நாடுகள் வருமாறு: காங்கோ, எத்தியோப்பியா, இந்தியா, நைஜீரியா மற்றும் பாகிஸ்தான்.

ஓரளவுக்கு பணம் உள்ள நாடுகளில் இந்த ரோட்டா வைரஸைத் தடுக்கும் வாக்சைன்கள் உள்ளன.

2004ஆம் ஆண்டு இந்த ரோட்டாவைரஸ் வயிற்றுப் போக்கிற்கு சாவு எண்ணிக்கை உலகம் முழுதும் 5,27,000 ஆக இருந்தது. அது 2008ஆம் ஆண்டு குறைந்துள்ளது. குறிப்பாக 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் வயிற்றுப்போக்கினால் இறப்பது குறைந்துள்ளது.

ஆனால் மரணம் குறைந்தது என்பதில் ஏகப்பட்ட சிக்கல்கள் உள்ளன. மருத்துவர்கள் எவ்வளவு மரணங்களை ரோட்டாவைரர்ஸ் வயிற்றுப்போக்கினால் இறந்தது என்று அறுதியிடுகின்றனர் என்பதைப் பொறுத்தது. எனவே இதில் புள்ளிவிவரங்கள் வேலைக்கு உதவாது. ஒரு குழந்தை இறந்தால் என்ன 1000 குழந்தைகள் இறந்தால் என்ன? இது இந்தியாவில் ஏன் அதிகம் நிகழ்கிறது என்பதற்கான பதில் இந்திய சுகாதார அமைச்சகத்திடம் இல்லை.

இந்தியாவில் தற்போது ரோட்டாவைரஸ் தடுப்பு மருந்திற்கான கிளினிக்கல் டிரையல்கள் நடைபெற்று வருகின்றன. ஆனால் கிளினிக்கல் டிரையல்கல்களே ஆட்கொல்லிகளாக மாறி வருகின்றன. இதில் எதை நம்புவது?

மேலும் இந்த தடுப்பு மருந்துகள் தனியார் மருந்து உற்பத்தி நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதனை கடும் விலை கொடுத்தே வாங்க வேண்டியுள்ளது. பொதுச் சுகாதார மருத்துவமனைகளில் இந்த தடுப்பு முஅருந்துகளைக் கொண்டு வருவது அரசின் கையில்தான் உள்ளது.

பொது வினியோகத்திற்கு ஒரு தடுப்பு மருந்தை ஒரு அரசு கொண்டுவர இயலாத நிலையில் புதிய தடுப்பு மருந்தின் ஆய்வினால்தான் என்ன பயன்?

வெப்துனியாவைப் படிக்கவும்