இரட்டைக் குழந்தைகளை பெறுவோருக்கு மன அழுத்தம்

பொதுவாக கர்ப்பிணிப் பெண்கள் இரட்டைக் குழந்தைகளையோ அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளையோ பெற்றால், அவர்களுக்கு குழந்தைகள் பிறந்த 9 மாதங்களில் அதிக மன அழுத்தம் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கும் பெண்ணைக் காட்டிலும், ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளைப் பெறும் பெண்களுக்கு 43 விழுக்காடு கூடுதல் மன அழுத்தம் ஏற்படுவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

மேரிலேண்ட் பகுதியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சுமார் 8 ஆயிரத்து 96 பெண்களிடம் மேற்கொண்ட ஆய்வில், ஒரே குழந்தைகளைப் பெற்ற 7 ஆயிரத்து 293 பெண்களை விடவும், ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளை ஈன்ற 776 பெண்கள் அதிக அளவுக்கு மன அழுத்தத்திற்கு ஆளாகியிருப்பது கண்டறியப்பட்டது.

குழந்தைகள் பிறந்து 9 மாதங்களுக்குப் பிறகு மன அழுத்தம் தொடர்பாக அந்தப் பெண்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

எனவே ஒரே பிரசவத்தில் அதிக குழந்தைகளைப் பெறுவதால், மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை ஏற்படுவதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்