இந்தியா: 70% பலகீனமான குழந்தைகள்

புதன், 22 ஜூலை 2009 (16:35 IST)
இ‌ந்‌தியா‌வி‌ல் மூ‌ன்று‌க்கு இர‌ண்டு ப‌ங்கு குழ‌ந்தைக‌ள் பல‌கீனமான உட‌ல்‌நிலையுட‌ன் இரு‌ப்பதாக இன்று இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையில் தெரிவிக்கப்பட்ட தகவல் நம்மை அச்சத்திற்குள்ளாக்குகிறது.

அதாவது, இந்தியாவில் உள்ள 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் ஏறக்குறைய 70 விழுக்காட்டினர் போதிய ஊட்டச்சத்து இன்றி பலகீனமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மக்களவையில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு பதிலளித்த சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் இந்த தகவலை வெளியிட்டார்.

மேலும், இந்த விழுக்காடு, கிராமப் புறங்களில் 71.5 விழுக்காடாகவும், நகர்ப்புறங்களில் 63 விழுக்காடாகவும் உள்ளது என்றும் தெரிவித்தார்.

8 மாநிலங்களில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பலகீனமானவர்களாக இருப்பது அதிகமாக உள்ளது. முதல் இடத்தில் பீகாரும் (78%), அடுத்ததாக மத்தியப் பிரதேசம் (74), உத்தரபிரதேசம் (73,9%), ஹரியானா (72.3%), சட்டீஸ்கர் (71.2%), ஜார்க்கண்ட் (70.3%), ஆந்திரப்பிரதேசம் (70.8%), கர்நாடகா (70.4%) ஆகிய மாநிலங்கள் உள்ளன.

மிக சத்தான உணவுப் பழக்கத்தைக் கொண்ட பஞ்சாப் மாநிலத்திலேயும் கூட, 66.4 விழுக்காட்டுக் குழந்தைகள் பலகீனமானவர்கள் இருப்பதாக ஆய்வு தெரிவிக்கின்றது. இந்தியாவின் தலைநகரான டெல்லியிலும் 57 விழுக்காட்டுக் குழந்தைகள் பலகீனமானவர்களாக உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்