குறைக்கப்பட்ட மொபைல் டேட்டா கட்டணங்கள்: சிறந்தது எது???

புதன், 31 ஆகஸ்ட் 2016 (14:45 IST)
ரிலையன்ஸ் ஜியோ அதிரடியை தொடர்ந்து, பல்வேறு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் டேட்டா கட்டணங்களை குறைத்து, பழைய கட்டணத்திலேயே அதிக டேட்டாக்களை வழங்கி வருகின்றன.


 


குறைக்கப்பட்ட விலைப்பட்டியலில் சிறந்தது எது என பார்ப்போம். 
 
ஏர்டெல்:
 
கடந்த சில வாரங்களாக ஏர்டெல் நிறுவனம் தனது சேவைக் கட்டணங்களை குறைத்ததோடு புதிய சலுகைகளையும் அறிவித்து வருகின்றது. அதன் படி சமீபத்தில் வழங்கிய அறிவிப்பில் சுமார் 80 சதவீத கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவித்தது.
ஏர்டெல் புதிய சேவையில் ரூ.51 செலுத்தி 1 ஜிபி 4ஜி டேட்டா பெற முடியும். இந்தச் சேவையை பெற ரூ.1498 செலுத்த வேண்டும். இதற்கு 1 ஜிபி 3ஜி அல்லது 4ஜி டேட்டா வழங்கப்படுகின்றது. 
 
வோடபோன்:
 
வோடபோன் நிறுவனம் தனது சேவைக் கட்டணங்களை குறைத்திருக்கின்றது. அதன் படி ரூ.297க்கு 1 ஜிபி 3ஜி அல்லது 4ஜி டேட்டா வழங்குகின்றது. ஆண்டு முழுக்க பார்க்கும் போது 12 மாத காலத்திற்கு 13 ஜிபி டேட்டா ரூ.3861க்கு வழங்கப்பட்டு வருகின்றது.
 
பிஎஸ்என்எல்:
 
ஜியோ போட்டியில் களம் கண்டிருக்கும் பிஎஸ்என்எல் நிறுவனம் 1 ஜிபி 3ஜி டேட்டாவினை ரூ.198க்கு வழங்குகின்றது. ஆண்டு முழுக்க பார்க்கும் போது 12 மாத காலத்திற்கு 13 ஜிபி டேட்டா ரூ.2574க்கு கிடைக்கின்றது.
 
ஐடியா: 
 
ஐடியா நிறுவனம் தன் பங்கிற்கு 1 ஜிபி 3ஜி டேட்டாவினை ரூ.249க்கு வழங்குகின்றது. இவ்வாறு பார்க்கும் போது ஆண்டு முழுக்க 12 மாத காலத்திற்கு 13 ஜிபி டேட்டா ரூ.3237க்கு வழங்கப்படுகின்றது.
 
அனைத்து நிறுவனங்களின் டேட்டா சேவைகளும் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டவை ஆகும். இதனால் 12 மாதங்களில் கிட்டதட்ட 13 டேட்டா திட்டங்களை பயன்படுத்த நேரிடும்.

வெப்துனியாவைப் படிக்கவும்