ஏர்செல், பிஎஸ்என்எல், டோகோமோ எது சிறந்த சேவை??

திங்கள், 26 செப்டம்பர் 2016 (12:53 IST)
ஏர்டெல், ரிலையன்ஸ், வோடபோன் போன்ற ஆப்ரேட்டர்கள் 4ஜி சேவைகளை நிறுவிய நிலையில், டாடா டோகோமோ, ஏர்செல், பி.எஸ்.என்.எல் ஆகிய மூன்று ஆப்ரேட்டர்கள் 3ஜி சேவையை தான் வழங்குகிறது. இதில் சிறந்தது எது?

 
ஏர்செல்: 
 
ஏர்செல் தொலைத் தொடர்பு நிறுவனம் வெறும் ரூ.8-ல் ஒரு நாளுக்கு 40 எம்பி அளவிலான 3ஜி தரவை வழங்குகிறது.
 
மேலும், ஏர்செல் ஒரு நாள், ஒரு வாரம், மூன்று வாரம் செல்லுப்படியாகும் திட்டங்களில் 2ஜி மற்றும் 3ஜி உள்ள பல சலுகைகளை வழங்குகிறது.
 
ஏர்செல் நிறுவனத்தின் சிறந்த 3ஜி பேக் ஆக ரூ.175 பேக் திகழ்கிறது. 1ஜிபி அளவிலான 3ஜி டேட்டாவை 28 நாட்களுக்கு வழங்குகிறது. 
 
அதிகபட்ச கட்டண திட்டமாக ரூ.1,697 திட்டம் இருக்கிறது, 28 நாட்கள் செல்லுபடியாகும் இந்த திட்டத்தில் 20ஜிபி கிடைக்கும்.
 
பிஎஸ்என்எல்: 
 
பிஎஸ்என்எல் 3ஜி திட்டமானது, ஒரு நாளைக்கு 20 எம்பியை ரூ.4கிற்கு அளிக்கிறது.
 
பிஎஸ்என்எல் நிறுவனம் ஒரு வாரம், இரண்டு வாரம், மூன்று வாரம் மற்றும் ஒரு மாதம் தரவு சலுகைகளை வழங்குகிறது.
 
ரூ.198 ரீசார்ஜ் செய்ய 28 நாட்கள் செல்லுபடியாகும் 1ஜிபி அளவிலான 3ஜி தரவை கொடுக்கிறது. 
 
அதிகபட்ச கட்டண திட்டமாக ரூ.3,099/- திகழ்கிறது, அதில் 15ஜிபி அளவிலான டேட்டாவுடன் 500 நிமிடங்களுக்கான இலவச வாய்ஸ் கால்களையும் வழங்குகிறது.
 
டாடா டோகோமோ: 
 
டோகோமோவிடம் வழங்க நிறைய சலுகைகள் உள்ளது. ரூ.8/-ல் 35 எம்பி அளவிலான 3ஜி தரவை வழங்குகிறது.
 
டாடா டோகோமோவின் அதிகபட்ச கட்டண திட்டமாக ரூ.1299/- திகழ்கிறது, அது 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் வரம்பற்ற 3ஜி தரவை வழங்குகிறது.
 
டாட்டா டோகோமோ திட்டமான ரூ.356-ல் 28 நாட்களுக்கான 3ஜிபி அளவிலான 3ஜி தரவு கிடைக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்