சொந்த செலவில் சூனியம்: அமெரிக்காவிற்கு ஆப்பு வைத்த டிரம்ப்

வெள்ளி, 21 செப்டம்பர் 2018 (15:07 IST)
சீன பொருட்கள் மீது அமெரிக்கா கடும் பொருளாதார தடைகளை விதித்து வருவதால், அமெரிக்க பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. பல அமெரிக்கர்கள் தங்களது வேலைவாய்ப்புகளை இழந்து தவித்து வருகின்றனர். 
 
சீன பொருட்களுக்கு 14 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள புதிய வரியை விதித்துள்ள ட்ரம்பின் நடவடிக்கையால், சீன நிறுவனம் மட்டுமின்றி அமெரிக்க நிறுவனங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 
 
குறிப்பாக அமெரிக்காவின் முன்னணி சில்லரை வர்த்தக நிறுவனமான வால்மார்ட் கடும் பாதிப்புகளை சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் வால்மார்ட் நிறுவனம் டிரம்பிற்கு கடிதம் மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
வால்மார்ட் கடிதத்தில் குறிப்பிட்டது பின்வருமாறு, சீன பொருட்களுக்கு வரி விதிக்கும் அமெரிக்காவின் நடவடிக்கையால் வால்மார்ட் நிறுவனத்துக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 
 
அமெரிக்காவில் அதிக அளவு உற்பத்தி பொருட்களை தயாரிக்கும் நிறுவனம் என்ற முறையில் இந்த வரியால் பொருட்களின் விலை உயரும் என்பதை டிரம்பிற்கு தெரியப்படுத்த விரும்புகிறோம்.
 
இதனால், அமெரிக்காவின் பொருளாதாரமே கடுமையாக பாதிக்கும். எனவே வரி விதிக்கும் விவகாரத்தில் அமெரிக்காவும், சீனாவும் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்