நிதிநெருக்கடி: 30,000 ஊழியர்களை வெளியேற்றும் வோல்க்ஸ்வேகன்!!

சனி, 19 நவம்பர் 2016 (15:13 IST)
2017ம் ஆண்டுக்குள் சர்வதேச அளவில் 30,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யப் போவதாக, வோல்க்ஸ்வேகன் நிறுவனம் அறிவித்துள்ளது.


 
 
ஜெர்மனியைச் சேர்ந்த உலக புகழ்பெற்ற கார் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான வோல்க்ஸ்வேகன் 30,000 ஊழியர்களை வெளியேற்ற இருப்பதாக அறிவித்துள்ளது.
 
சமீபத்தில் அமெரிக்க வாகன சந்தையில் நச்சுப் புகை வெளியிடும் வாகனங்களை அதிகளவில் விற்பனை செய்ததாகக் கூறி, வோல்க்ஸ்வேகன் மீது 10 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான அபராதம் விதிக்கப்பட்டது. 
 
இதனால், அந்நிறுவனத்திற்கு பெரும் நிதிநெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதைச் சமாளிக்கும் விதமாக, இந்த முடிவை எடுத்துள்ளது. பணிநீக்கம் செய்யப்படும் பெருமளவு ஊழியர்கள் ஜெர்மனி, தென்னமெரிக்கா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.
 
வோல்க்ஸ்வேகன் குழுமத்தில் மொத்தம் 6 லட்சத்து 10 ஆயிரத்து 76 பேர் பணிபுரிகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்