ரூ.1-க்கு கூடுதல் டேட்டா: வோடபோன் புது சலுகை!

சனி, 5 மே 2018 (10:06 IST)
ஜியோ வரவுக்கு பின் வாடிக்கையாளர்களுக்கு பயன் அளிக்கும் வகையில் விலை குறைப்பு, கூடுதல் சலுகை என பல்வேறு சலுகைகளை முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.
 
ஏர்டெல் மற்றும் ஜியோ ஏற்கனவே தினமும் 3 ஜிபி டேட்டா ரீசார்ஜ் திட்டத்தை வழங்கி வரும் நிலையில், வோடபோனும் 3 ஜிபி டேட்டா சலுகையை வழங்கியுள்ளது. 
 
முன்னதாக ரூ.348 சலுகையில் தினமும் 2.5 ஜிபி டேட்டா வோடபோன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டது. தற்போது வழங்கப்பட்டுள்ள புதிய சலுகையில் ரூ.1 மட்டும் கூடுதலாக வசூலித்து 0.5 ஜிபி டேட்டா கூடுதலாக வழங்கப்படுகிறது. 
அதன்படி தினமும் 3 ஜிபி 3ஜி/4ஜி டேட்டா வழங்கப்படுகிறது. இத்துடன் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், இலவச ரோமிங் உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகின்றன. 
 
ஜியோ வழங்கும் ரூ.299 சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 3 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. ஏர்டெல் ரூ.349 சலுகையில் தினமும் 3 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்